கோப்புப் படம்

 
தமிழகம்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அக்.1-ல் தவெக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம்

தமிழினி

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு தவெக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டாக பிரச்சாரம் செய்வார்கள் என தவெக அறிவித்துள்ளது.

இது குறித்து தவெக எக்ஸ் தளப் பதிவில் வெளியான தகவல்: தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையை, தனித்துவமான சமூக நீதியைப் போற்றிப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, திறன் மிகுந்த ஆட்சியை, முதல்வர் விஜய் தமிழகத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த நல்லாட்சி தொடரவும் ஜனநாயக மாண்புகள் காக்கப்படவும் அமைந்த கொள்கைக் கூட்டணியே மதச்சார்பற்ற சமூ கநீதி வெற்றிக் கூட்டணி.

தமிழக வெற்றிக் கழகம் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி, மாலை 4 மணிக்கு மதுராந்தகத்தில் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT