டிடிவி தினகரன்
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமமுக தலைவர் டிடிவி தினகரன், தவெக ஆட்சி குதிரை பேரம் ஆட்சி என விமர்ச்சித்தார்.
மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து சரவம்பாக்கம் பகுதியில் டிடிவி தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாததால் தமிழக மக்களை பழிவாங்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் தவெகவுடன் சென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் தவெகவை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். அவர்களும் தவெக ஆதரவளித்தவர்கள்தான்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி, பொறுமையை கடைபிடிக்கிறார். தவெக பக்கம் செல்ல முயற்சித்த 25 எம்எல்ஏக்கரின் நிலை தற்போது என்னவாகியுள்ளது. ஏன், என் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவை விலைக்கு வாங்கியவர்கள்தான் தவெகவினர்.
தவெக ஆட்சி குதிரை பேரம் ஆட்சியைத்தான் நடத்தி வருகின்றனர். அனைவரையும் கூட்டுக் களவாணிகள் என்று முதல்வர் கூறுகிறார். இங்கிருந்து சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் பணம் மற்றும் பதவிக்காகத்தான் அங்கு சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.