டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

“கூட்டணி அமைச்சரவையில் அமமுகவும் இடம்பிடிக்கும்” - தினகரன் உற்சாகம்

செய்திப்பிரிவு

தமி​ழ​கத்​தில் அடுத்து அமைய​வுள்ள கூட்​டணி அமைச்​சர​வை​யில் அமமுக பங்கு பெறு​வதற்​கான பிர​காச​மான அறிகுறிகள் தென்​படு​வ​தாக அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் தெரி​வித்​தார்.

நேற்று கோவை மேட்​டுப்​பாளை​யத்​தில் நடந்த அமமுக நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​றபின், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கூறிய​தாவது: தமி​ழ​கம் முழு​வதும் தொகுதி வாரி​யாக கூட்​டம் நடத்தி வரு​கிறேன். கட்சி கட்​டமைப்பு வலு​வாக உள்ள தொகு​தி​களை கூட்​ட​ணி​யில் பெற்று போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளோம். டிசம்​பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் கட்சி நிர்​வாகி​களிடம் விருப்ப மனுக்​களைப் பெறவுள்​ளோம். சட்​டசபைத் தேர்​தலில், அமமுக-​வைத் தவிர்த்து விட்​டு, எந்த கூட்​ட​ணி​யும் ஆட்சி அமைக்க முடி​யாது என்ற நிலை உரு​வாகி உள்​ளது.

கூட்​ட​ணிக்​காக நாங்​கள் நிபந்​தனை வைக்க மாட்​டோம். நட்பு ரீதி​யாக, எங்​களுக்கு மரி​யாதை கொடுக்​கின்ற கூட்​ட​ணி​யில், நாங்​கள் இடம்​பெறு​வோம். நாங்​கள் இடம்​பெறும் கூட்​டணி தான் வெற்​றிக் கூட்​ட​ணி​யாக, ஆட்சி அமைக்​கும் கூட்​ட​ணி​யாக இருக்​கும். சட்​டசபைத் தேர்​தலில் வெற்றி பெற்று அமமுக-வைச் சேர்ந்​தவர்​கள் உறு​தி​யாக சட்​டமன்​றம் செல்​வார்​கள். தேர்​தலுக்​குப்​பின் அமை​யும், கூட்​டணி அமைச்​சர​வை​யில் பங்கு பெறும் பிர​காச​மான அறிகுறிகள் தென்​படு​கின்​றன.

அண்​ணா​மலை எனது நண்​பர். நாங்​கள் நட்​புரீ​தி​யாக சந்​திக்​கி​றோம். அதைத்​தாண்டி அரசி​யல் கணக்​கு​களை தொடர்​புபடுத்​தி​னால் அதற்கு நாங்​கள் பொறுப்​பல்ல. அமைச்​சர் நேரு மீதான, அமலாக்​கத்​துறை வைத்​துள்ள ஊழல் குற்​றச்​சாட்​டின் மீது, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்​கப்​போகிறது என்​பதை பொறுத்​திருந்​திருந்து பார்ப்​போம்.

பல்​வேறு தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறை​வேற்​றாத திமுக, மக்​கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற, யார் காரணம் என்​பது உங்​களுக்​குத் தெரி​யும். எதிர்​கட்​சிகள் கூட்​ட​ணி​யில் தவறு செய்​வார்​கள் என்று திமுக காத்​திருக்​கிறது. அதன் அடிப்​படை​யில் தான் 200 தொகு​தி​களில் வெற்றி பெறு​வோம் என்று அறை​கூவல் விடுக்​கின்​ற​னர்.

தனக்கு பதவி இருக்க வேண்​டும், கட்சி தன் கட்​டுப்​பாட்​டில் இருக்க வேண்​டும் என்ற சுயநலத்​தோடு சிலர் இருப்​ப​தால்​தான், இந்​தத் தேர்​தலிலும் வெற்றி பெறு​வோம் என்று திமுக நம்​பு​கிறது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT