டெல்லியில் அமித் ஷாவுடன் அண்ணாமலை ஆலோசனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தேர்தலையொட்டி கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பாஜக, தற்போது பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அமித் ஷாவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 7-ம் தேதி கோவையில் நடந்த விழாவில் பங்கேற்ற அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து தனியே பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த டிடிவி தினகரனுக்கு, அண்ணாமலை வீட்டில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவையில் ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் சந்தித்து பேசிய அண்ணாமலை நேற்று முன்தினம் இரவே கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் பாஜக நடத்தும் எஸ்ஐஆர் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக தெரிவித்த அண்ணாமலை, டெல்லியில் அமித் ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை ஆகியோரிடம் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அமித் ஷாவிடம் அண்ணாமலை தெரிவித்தார்.

இருவரையும் மீண்டும் கூட்டணியில் இணைக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க மாட்டேன், வேண்டுமென்றால் தனிக்கட்சியாக செயல்பட்டு கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சேபம் இல்லை என அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு..” - பாமக நிறுவனர் ராமதாஸ் கூச்சம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in