தமிழகம்

ஜிபிஎஸ் இல்லாத கனிம லாரிகளுக்கு இன்று முதல் அனுமதி இல்லை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஜிபிஎஸ் கருவி இல்​லாமல் கனிம வளங்களை ஏற்றிச் செல்​லும் லாரி​களுக்கு இன்று முதல் (நவ.1) போக்​கு​வரத்து அனுமதி சீட்டு வழங்​கப்​படாது என்று தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது​குறித்து புவி​யியல் மற்​றும் சுரங்​கத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், சட்​ட​விரோத​மாக கனிம வளங்​கள் கடத்​திச் செல்​வதைத் தடுக்க கனிம வளங்​களைக் கொண்டுசெல்​லும் அனைத்து வகை​ சரக்கு வாக​னங்​களி​லும் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்​தப்​பட வேண்​டும்.

இன்று முதல் ஜிபிஎஸ் பொருத்​தப்​படாத கனிமவள வாகனங்களுக்குப் போக்​கு​வரத்து அனுமதிச் சீட்டு வழங்​கப்​பட​மாட்​டாது. ஜிபிஎஸ் கருவி மற்​றும் செல்​லத்​தக்க அனுமதிச் சீட்டு இல்லாத வாக​னங்​கள் பறி​முதல் செய்​து உரிமையாளர்​ மீது குற்றவியல் நட​வடிக்​கை மேற்​கொள்​ளப்​படும் என கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT