தமிழகம்

கவுன்ட்டர்களில் ரயில் டிக்கெட் வாங்கினாலும் ‘பயணக் காப்பீடு’ - 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே கவுன்ட்​டர்​களில் நேரடி​யாகச் சென்று முன்​ப​திவு செய்​யும் பயணிகளுக்​கும் விருப்​பத்​தின் பேரில் பயணக் காப்​பீடு வழங்​கும் திட்​டத்தை நீட்​டித்து ரயில்வே வாரியம் உத்​தரவிட்டுள்​ளது. இந்த புதிய நடைமுறை நாளை அக்.27-ம் தேதி முதல் அனைத்து ரயில்வே மண்​டலங்​களி​லும் அமலுக்கு வரு​கிறது. உச்ச நீதி​மன்​றம் கடந்த 6-ம் தேதி வழங்​கிய தீர்ப்​பின் அடிப்​படை​யில் இந்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது​குறித்து, ரயில்வே வாரியத்​தின் பயணிகள் சந்​தைப்​படுத்​து​தல் பிரிவு செயல் இயக்​குநர் சிவேந்​திர சுக்லா, அனைத்து மண்​டல ரயில்வே மேலா​ளர்​களுக்​கும் அனுப்​பியுள்ள சுற்றறிக்கை: கவுன்ட்​டர்​களில் டிக்கெட் முன்​ப​திவு செய்​யும் பயணிகள் இந்த காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற விரும்​பினால், காப்​பீட்​டுக்​கான பிரீமியம் தொகையை டிஜிட்​டல் முறைகளில் மட்​டுமே செலுத்த வேண்​டும். அத்​துடன் பயணிகளின் மொபைல் எண் கட்​டாய​மாகப் பதிவு செய்​யப்​பட வேண்​டும். காப்​பீட்​டைத் தேர்வு செய்​யும் பயணிகளுக்கு, அதுகுறித்த பாலிசி விபரங்​களை அவர்​களின் பதிவு செய்​யப்​பட்ட மொபைல் எண்​ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக அனுப்பி வைக்​கப்​படும்.

பயிற்சி மற்​றும் கண்​காணிப்பு: இத்​திட்​டத்தை தொய்​வின்​றிச் செயல்​படுத்த ரயில்வே தகவல் தொழில்​நுட்ப மையம் (CRIS), இந்​திய ரயில்வே உணவு மற்​றும் சுற்​றுலா கழகம் இணைந்து மென்​பொருள் மேம்​பாட்​டுப் பணிகளை மேற்​கொண்டு வரு​கின்​றன. அனைத்து கோட்ட ரயில்வே மேலா​ளர்​கள் மற்​றும் வர்த்​தக அதி​காரி​கள் இந்த நடைமுறையைக் கண்​காணிப்​பார்​கள். டிக்​கெட் கவுன்ட்​டர் ஊழியர்​களுக்கு இது​குறித்த உரிய ஆலோ​சனைகளை வழங்​கவும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

ஐஆர்​சி​டிசி இணை​யதளம் மூலம் ஆன்​லைனில் டிக்​கெட் முன்​ப​திவு செய்​பவர்​களுக்​குத் தற்​போது நடைமுறை​யில் உள்ள அதே காப்​பீட்டு விதி​முறைகளும், நிபந்​தனைகளும் இனி கவுன்ட்​டர்​களில் எடுக்​கும் டிக்​கெட்​டுகளுக்​கும் பொருந்​தும் என்று ரயில்வே வாரியம் தெளிவுபடுத்​தி​யுள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தரவு என்​ப​தால், இப்​பணிகளை ‘மிகவும் அவசர​மானது’ என கருதி அக்.27-க்​குள் முடிக்க, அனைத்து ரயில்வே மண்​டல முதன்மை தலைமை வர்த்​தக மேலா​ளர்​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

முன்பு, ரயில்வே முன்​ப​திவு கவுன்ட்​டர்​களில் நேரடி​யாக டிக்​கெட் வாங்​கும் பயணிகளுக்கு பயணக் காப்​பீடு வசதி வழங்​கப்​பட​வில்லை. ஆன்​லைன் மூலமாக (ஐஆர்​சி​டிசி இணை​யதளம் அல்​லது செயலி வழி​யாக) இ-டிக்​கெட் பதிவு செய்​யும் பயணிகளுக்கு மட்​டுமே விருப்​பத்​தின் பேரிலான பயணக் காப்​பீடு திட்​டம் பிரத்​யேக​மாக வழங்​கப்​பட்டது.

இந்த வேறு​பாட்​டைக் களைவதற்​காகவே தற்​போது புதிய மாற்​றம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்​தப் புதிய நடைமுறை அக்.27-ல் செயல்​பாட்​டுக்கு வரவுள்​ளது. விருப்​பத்​தின் பேரிலான பயணக் காப்​பீடு திட்​டத்​தில் ஒவ்​வொரு பயணிக்​கும் 45 பைசா பிரீமியம் தொகை​யாக வசூலிக்​கப்​படும். உதா​ரண​மாக, ஒரு டிக்​கெட்​டில் 4 பேருக்கு முன்​ப​திவு செய்து காப்​பீட்​டைத் தேர்வு செய்​தால், மொத்​தம் ரூ.1.80 பிரீமிய​மாக வசூலிக்​கப்​படும். 5 வயதுக்​குஉட்​பட்ட குழந்​தைகள் (தனி இருக்கை-படுக்கை வசதி பெறாதவர்​கள்) இந்த காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் வர​மாட்​டார்​கள்.

காப்​பீட்​டுத் தொகை: ரயில் பயணத்​தின் போது ஏதேனும் எதிர்​பாராத விபத்து ஏற்​பட்​டால், அதி​கபட்​ச​மாக ரூ. 10 லட்​சம் வரை இழப்​பீடு வழங்​கப்​படும்.

விபத்​தினால் மரணமோ அல்​லது நிரந்​தர முழு உடல் ஊனமுற்​றால் ரூ.10 லட்​சம், நிரந்​தர பகுதி உடல் ஊனமடைந்​தால் ரூ.7.50 லட்சம், காயங்​களுக்​கான மருத்​து​வ​மனை செல​வு​கள் ரூ. 2 லட்​சம் வரை​யும், உடலை சொந்த ஊருக்​குக் கொண்டு செல்​ல ரூ. 10 ஆயிர​ம் என இழப்​பீடு பெற முடியும்.

இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்டி, மூன்​றடுக்கு ஏசி வகுப்பு, இரண்​டடுக்கு ஏசி வகுப்பு, ஏசி முதல் வகுப்பு என எந்த வகுப்​பில் பயணித்​தா​லும், ஒரு பயணிக்​கான பிரீமியம் தொகை தற்​போது நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளபடி 45 பைசா (வரி​கள் உட்​பட) மட்​டுமே ஆகும். இதில் தொலைவு அல்​லது கட்​ட​ணத்​துக்கு ஏற்ப பிரீமியம் தொகை மாறாது. அனைவருக்​கும் நிலை​யான கட்​ட​ணம்​தான் வசூலிக்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT