தமிழகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 570 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: புத்​தாண்டை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து 570 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஆங்​கில புத்​தாண்டை முன்​னிட்டு டிச.30 மற்​றும் 31 மற்​றும் ஜன.1-ம் தேதி​களில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் இருந்​தும் தமிழகம் முழு​வதும் மக்​கள் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதன்​படி சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று (டிச.30-ம் தேதி) 240 பேருந்​துகளும், நாளை 255 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்​றும் நாளை​யும் மொத்​தம் 55 பேருந்​துகளும் மேற்​கூறிய இடங்​களி​லிருந்​தும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும் மாதவரத்​திலிருந்து இன்​றும், நாளை​யும் மொத்​தம் 20 பேருந்​துகளும் சிறப்பு பேருந்​துகளாக இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதே​போல் சொந்த ஊர்​களில் இருந்து சென்னை மற்​றும் பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப ஜன.3-ம் தேதி (சனிக்​கிழமை) அன்று 525 பேருந்​துகளும், ஜன.4-ம் தேதி 765 பேருந்​துகளும் அனைத்து இடங்​களி​லிருந்​தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நாளை 11,502 பயணி​களும் புதன்​கிழமை 8,380 பயணி​களும் வியாழன் அன்று 11,135 பயணி​களும் வெள்​ளிக்​கிழமை 7,501 பயணி​களும் சனிக்​கிழமை 10,794 பயணி​களும் ஞாயிறு அன்று 19,216 பயணி​களும் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்​தினை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போ​திய அலு​வலர்​கள்​ நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT