தமிழகம்

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் ஜூன் மாதம் திறப்பு: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: குத்​தம்​பாக்​கம் பேருந்து முனை​யம் வரும் ஜூன் மாதம் திறக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரிவித்​தனர். சென்னை கோயம்​பேடு புறநகர் பேருந்து நிலை​யத்​தில் ஏற்​படும் நெரிசலுக்கு தீர்​வாக, கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யம் கட்​டப்​பட்டு தற்​போது இயங்கி வரு​கின்​றது.

தென் மாவட்​டங்​களுக்கு இயக்​கப்​படும் 90 சதவீத அரசுப் பேருந்​துகள் தற்​போது கிளாம்​பாக்​கத்​தில் இருந்து இயக்​கப்​படும் நிலை​யில், ஈசிஆர் வழி​யாக செல்​லும் பேருந்​துகள், வேலூர், தரு​மபுரி போன்ற வட மாவட்​டங்​கள் மற்​றும் பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் பேருந்​துகள் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், கோயம்​பேடு மற்​றும் பூந்​தமல்லி பகு​தி​களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்​கும் வித​மாக திரு​மழிசை அடுத்த குத்​தம்​பாக்​கத்​தில் சுமார் ரூ.400 கோடி மதிப்​பீட்​டில் பேருந்து முனை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

24.8 ஏக்​கர் பரப்​பள​வில் அமைக்​கப்​பட்​டுள்ள இந்த நவீன பேருந்து முனை​யத்​தின் கட்​டு​மான பணி​கள் முடிந்​துள்ள நிலை​யில், மின்​சார இணைப்பு மற்​றும் வர்​ணம் பூசுதல் போன்ற இறு​திக்கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த பேருந்து முனை​யம் வரும் ஜுன் மாதம் திறக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்​து, போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் மேலும் கூறிய​தாவது: இந்த முனை​யத்​தில் இருந்து அரசு விரைவுப் பேருந்​துகள், விழுப்​புரம் மற்​றும் சேலம் கோட்​டப் பேருந்​துகள், கர்​நாடக அரசுப் பேருந்​துகள் மற்​றும் தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

வேலூர், ஓசூர், பெங்​களூரு, திருப்​பதி மற்​றும் திரு​வனந்​த​புரம் போன்ற முக்​கிய நகரங்​களுக்​குச் செல்​லும் பயணி​கள் இந்த முனை​யத்​தின் மூலம் பெரிதும் பயனடை​வார்​கள்.

தேசிய நெடுஞ்​சாலை உடன் நேரடி​யாக இணைக்​கப்​பட்​டுள்ள இந்த முனை​யம், அண்டை மாநிலங்​களுக்​குச் செல்​லும் பேருந்​துகள் நகருக்​குள் நுழை​யாமல் விரை​வாகச் செல்ல வழி​வகை செய்​கிறது.

மேலும், பூந்​தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் நிலை​யத்​தில்​ இருந்​து 6 கி.மீ. தூரத்​தில்​ இந்​த பேருந்​து முனை​யம்​ உள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT