சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் நடக்கும் விற்பனை அளவைக் கொண்டு 3 வகைகளாக பிரித்து அதற்கேற்ப கடை பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை அடிப்படையாக கொண்டு மாவட்ட மேலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் தேவை குறைவாக உள்ள கடைகளில் அதிகம் உள்ள பணியாளர்கள், தேவை அதிகம் உள்ள கடைகளில் குறைவான பணியாளர்கள் உள்ளனரா என்பதை கண்டறிந்து, ஒரே கடையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாறுதலில் மாவட்ட மேலாளரின் முடிவே இறுதியானது. பணியாளர் மாற்றுத்திறனாளியாகவோ கடைக்கு வேறு பணியாளர்களே இல்லை என்றாலோ 3 ஆண்டுகளுக்கு மேல்பணியாற்ற அனுமதிக்கலாம்.