தமிழகம்

வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் இன்று தொடங்க இருந்த ரயில் சேவை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்​சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் இன்று தொடங்க இருந்த ரயில் சேவை தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. தொழில்​நுட்ப ரீதி​யாக சில பணி​களை முடிக்க ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ள​தால், இப்​பாதை​யில் ரயில் சேவை தாம​தமாகி உள்​ளது.

இதனால், பயணி​கள் மிகுந்த ஏமாற்​றமடைந்​துள்​ளனர். சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்​பர் மாதத்​தில் நிறைவடைந்​தது.

இதையடுத்​து, இத்​தடத்​தில் கடந்த ஆண்டு நவ.7, டிச.15 ஆகிய தேதி​களில் அடுத்​தடுத்து சரக்கு ரயில் இயக்கி சோதிக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக, ரயில்வே பாது​காப்பு ஆணை​யருக்கு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

இதைத்தொடர்ந்து வேளச்​சேரி - பரங்​கிமலை ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி (இன்று முதல்) மின்​சார ரயில் சேவை தொடங்​கப்​படும் என்று தெற்கு ரயில்வே பிப்​.25-ம் தேதி அறி​வித்​தது.

இதையடுத்​து, புழு​தி​வாக்​கம், ஆதம்​பாக்​கம் ஆகிய நிலை​யங்​களில் பயணி​களுக்கு தேவை​யான வசதி​களை ஏற்​படுத்​தும் பணி நடை​பெற்​றது. மேலும், இத்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் கடந்த 5-ம் தேதி ஆய்வு செய்​தார்.

தண்​ட​வாள அமைப்​பு, மேம்​பாலக் கட்​டமைப்​பு​கள், மின்​சார வழித்​தடங்​கள், சிக்​னல் மற்​றும் இன்​டர்​லாக்​கிங் அமைப்​பு​கள் உள்​ளிட்ட பாது​காப்பு வசதி​களை ஆணை​யர் ஆய்வு செய்​தார்.

ஏசி மின்​சார ரயில் மூல​மாக அதிவேக சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்​டது. இச்​சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக முடிந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். எனவே, இன்று முதல் திட்​ட​மிட்​டப்​படி, மின்​சார ரயில் சேவை தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது.

அறிக்கை வரவில்லை

இந்​நிலை​யில், இன்று தொடங்க இருந்த ரயில் சேவை தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்​து, தெற்கு ரயில்வே வட்​டாரங்​கள் கூறும்போது, "ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர், இந்த மார்க்​கத்​தில் சில பிரச்​சினை​களை அடை​யாளம் கண்​டுள்​ளார்.

அவற்றை சரிசெய்ய தெரி​வித்​துள்​ளார். அதே நேரத்​தில், நிபந்​தனை​யுடன் அனு​மதி கூட வழங்​க​வில்​லை. அவற்றை முடித்த பிறகே, அனு​மதி வழங்​கப்​படும்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: பரங்​கிமலை - வேளச்​சேரி மார்க்​கத்​தில் ரயில் சேவை தொடங்​கு​வது குறித்​து, தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணை​யரிடம் இருந்து அறிக்கை வரவில்​லை. பாது​காப்பு ஆணை​யர் கடந்த சனிக்​கிழமை (7-ம் தேதி) தான் டெல்​லிக்கு சென்​றார். 9-ம் தேதி (நேற்​று) அறிக்கை வரவேண்​டும்.

அறிக்கை வர ஓரிரு நாட்​கள் ஆகலாம். வந்​த​பிறகே, ரயில் சேவை தொடங்​கும்" என்​றனர். எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடைமேடை சீரமைப்பு பணி நடை​பெறு​வ​தால், புறநகர் மின்​சார ரயில் சேவை குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால், பயணி​கள் தின​மும் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பரங்​கிமலை -வேளச்​சேரி தடத்​தில் இன்று ரயில் சேவை தொடங்​கும் என எதிர்​பார்த்​திருந்​த மக்​கள்​ மிகுந்​த ஏமாற்​றமடைந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT