தமிழகம்

குரோம்பேட்டையில் விளையாடச் சென்றபோது சோகம்: 4 குழந்தைகள் ஏரியில் சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

குரோம்​பேட்டை: வீட்​டின் அருகே விளை​யாடச் சென்ற 4 பள்ளி மாணவர்​கள் திருநீர்​மலை ஏரி​யில் மூழ்கி உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

குரோம்​பேட்டை லட்​சுமிபுரம் கிருஷ்ணா தெரு​வைச் சேர்ந்த தயாளன் மகன் யுவனேஷ் (10), கிரு​பாகரன் மகன் தேவதர்​ஷன் (12), ரங்​க​நாத​சாமி 2-வது தெரு​வைச் சேர்ந்த பூஜா (13), ரங்​க​நாத​சாமி 1-வது தெரு​வைச் சேர்ந்த லால்​சந்த் மகள் குஷி (13) ஆகிய 4 பேரும் நேற்று முன்​தினம் மாலை வீட்​டிலிருந்து வெளியே சென்​றுள்​ளனர். பின்​னர் அவர்​கள் வீடு திரும்​ப​வில்​லை.

இதையடுத்து பெற்​றோர் குரோம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து மாணவர்​களைத் தேடி வந்​தனர். மேலும் காணா​மல்​போன குழந்​தைகள் குறித்த தகவல்​கள் அப்​பகுதி வாட்​ஸ்​-அப் குழுக்​களி​லும் பகிரப்​பட்​டு, அவர்​களை கண்​டு​பிடிக்க பொது​மக்​கள் உதவி கோரப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று காலை லட்​சுமிபுரம் பகு​தி​யில் உள்ள திருநீர்​மலை ஏரி​யில் 4 சிறார்​கள் உயி​ரிழந்த நிலை​யில் கிடப்ப​தாக பொது​மக்​கள் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். சம்பவ இடத்​துக்கு சென்ற போலீ​ஸார் மற்​றும் தீயணைப்​பு, மீட்​புப் படை​யினர் 4 பேரின் உடல்​களை​யும் மீட்​டனர்.

விசா​ரணை​யில், பள்ளி விடு​முறை என்​ப​தால் 4 பேரும் அரு​கிலுள்ள ஏரிக்கு குளிக்​கச் சென்​றிருக்​கலாம் என்​றும், அப்​போது ஏரியில் இருந்த சேற்​றில் சிக்கி நீரில் மூழ்​கி​யிருக்​கலாம் என்​றும் முதற்​கட்​ட​மாகத் தெரிய​வந்​துள்​ளது.

மீட்​கப்​பட்ட உடல்​கள் பிரேதப் பரிசோதனைக்​காக தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. குழந்​தைகளின் உடல்​களைப் பார்த்த பெற்​றோர், உறவினர்​கள் கதறி அழுதது அப்​பகு​தி​யில் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது. சம்​பவம் குறித்து குரோம்​பேட்டை போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஏரி​களில் பாது​காப்பு

ஏரி​யில் மூழ்கி 4 குழந்​தைகள் உயி​ரிழந்த சம்​பவத்​தைத் தொடர்ந்​து, தாம்​பரம் மாநக​ராட்சி மற்​றும் நீர்​வளத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள ஏரி​களில் பாது​காப்பு ஏற்​பாடு​களை மேலும் வலுப்​படுத்த வேண்​டும் என பொது​மக்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT