திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி சென்னையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி சென்னையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Updated on: 
1 min read

சென்னை: திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​றக் கோரி சென்​னை​யில் 19 இடங்​களில் இந்து முன்​னணி ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வலி​யுறுத்​தி, தமிழகம் முழு​வதும் அக்​டோபர் 11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என இந்து முன்​னணி சார்​பில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், அக்​டோபர் 11-ம் தேதி பல்​வேறு நலத்​திட்​டங்​களைத் தொடங்கி வைப்​ப​தற்​காகப் பிரதமர் நரேந்​திர மோடி சென்னை வருகை தரவுள்​ளார். இதனையொட்​டி, பாது​காப்பு காரணங்​களுக்​காகச் சென்​னை​யில் மட்​டும் நேற்று (முன்​ன​தாகவே) இந்த ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது.

அதன்​படி, சென்னை மாதவரம் நகராட்சி அரு​கில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்து முன்​னணி மாநில பொதுச் செய​லா​ளர் மனோகர் தலைமை தாங்​கி​னார். கொளத்​தூர் மூகாம்​பிகை சந்​திப்​பில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் மாநில செய்​தித் தொடர்​பாளர் இளங்​கோவன் பங்​கேற்​றார்.

இதுத​விர மணலி, பெரம்​பூர், ஆர்​.கே.நகர், தி.நகர், எழும்​பூர், பட்​டாளம், அண்​ணாநகர், வில்​லி​வாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, ஆயிரம்​விளக்​கு, சைதாப்​பேட்​டை, விரு​கம்​பாக்​கம், போரூர், மதுர​வாயல், வேளச்​சேரி உட்பட சென்னை மாநகரின் 19 முக்​கிய இடங்​களில் இந்த ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்து முன்​னணி நிர்​வாகி​கள் மற்​றும் பாஜக​வினர் பெருந்​திரளாகக் கலந்​து​கொண்​டனர்.

கொளத்​தூர் ஆர்ப்​பாட்​டத்​தின் போது செய்​தி​யாளர்​களிடம் இந்து முன்​னணி மாநில செய்​தித் தொடர்​பாளர் இளங்​கோவன் கூறிய​தாவது:

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் விளக்கு ஏற்​றலாம் என உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தும், கடந்த திமுக அரசு அதனை அமல்​படுத்​தாமல் எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. தற்​போதைய தவெக அரசும் அதே நிலைப்​பாட்டை எடுத்​து, வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தைக் காரணம் காட்டி தீபம் ஏற்​று​வதை நிறுத்தி வைத்​துள்​ளது. உயர் நீதி​மன்​றத் தீர்ப்​புக்​குத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

எனவே, வரும் கார்த்​திகை 1-ம் தேதி திருப்​பரங்​குன்ற மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் உறு​தி​யாகத் தீபம் ஏற்ற தவெக அரசு நடவடிக்கை வேண்​டும். இதற்​காகவே இந்து முன்​னணி கடந்த 40 ஆண்​டு​களாகத் தொடர்ந்து போராடி வரு​கிறது. இது தொடர்​பாகத் தமிழக முதல்​வரை நேரில் சந்​தித்து மனு அளிக்க நேரம் கேட்டு இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அனு​மதி கிடைக்​கும் பட்​சத்​தில் முதல்​வரைச் சந்​தித்து முறை​யிடு​வோம். நீதி​மன்​றத் தீர்ப்பை அமல்​படுத்​து​வ​தே அரசின்​ கடமை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி சென்னையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறைந்தது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in