தமிழகம்

குடியரசு துணைத் தலைவர் வருகை: இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-வது ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது.

இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதேபோல் மறுநாளும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விமான நிலையம், போரூர், ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனரக

மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT