தமிழகம்

தீபத்தூண் தீபத்துகாக திருப்பரங்குன்றம் காய்கறி வியாபாரிகள் அகல் விளக்கு ஏற்றி ஆதரவு

என்.சன்னாசி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் காய்கறி சந்தை வியாபாரிகள் தங்களது கடைகளில் அகல் விளக்குகளை ஏற்றி கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என தற்போது இறுதி செய்யப்படாமல் குழப்பம் நீடிக்கிறது.

இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் ஒரு நாள் தீபம் ஏற்ற வேண்டும் முருக பக்தர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். இதுபோன்ற சூழலில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலை சுற்றி பலத்தை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் காய்கறி சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைகளில் அகல் விளக்குகளை ஏற்றி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT