கோப்புப் படம்

 
தமிழகம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தொழிலாளர்கள் உறுதி செய்ய தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்டணி வெற்​றியை தொழிலா​ளர்​கள் உறுதி செய்ய வேண்​டும் என தொழிற்​சங்​கங்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளன.

இதுகுறித்து எல்​பிஎஃப், எச்​எம்​எஸ், ஏஐடி​யுசி, சிஐடி​யு, ஐஎன்​டி​யுசி உள்​ளிட்ட 10 தொழிற்​சங்​கங்​கள் வெளி​யிட்ட கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசை பாஜக 3-வது முறை​யாக கைப்​பற்​றியதற்கு பின்​பு, இந்​தி​யாவை தனது ஒற்​றைப் பரி​மாண இந்​துத்​துவ சர்​வா​தி​காரத்​தின் கீழ் கொண்​டு​வரும் இலக்கை நோக்கி வேக​மாக நடை​போடு​கிறது.

          

அரசி​யல் அமைப்​புச் சட்​டம் வகுத்​தளித்த மாநிலங்​களின் ஒன்​றி​யம் என்ற கூட்​டாட்சி முறைமையை சீர்​குலைக்க அனைத்து வகை​யான முயற்​சிகளை​யும் எடுத்து வரு​கிறது. 4 தலை​முறை​களாகப் போராடி பெற்ற வேலை பாது​காப்​பு, ஊதிய பாது​காப்​பு, சமூகப் பாது​காப்பு ஆகியவை முற்​றாக பறிக்​கப்​படு​கின்​றன.

இதற்கு ஏற்ற வகை​யில் தொழிலா​ளர் சட்​டங்​கள் திருத்​தப்​பட்டு 4 சட்​டத் தொகுப்​பு​கள் ஆக்​கப்​பட்​டன. தமிழகத்​தில் திமுக அரசு பல நலத்​திட்​டங்​களை வெற்​றிகர​மாக நிறைவேற்றி இருக்​கிறது.

தொழிலா​ளர் நலன், தனி​யார்​மய​மாக்​கல் போன்ற சில பிரச்​சினை​கள் 8 மணி நேர வேலை அதி​கரிப்​பு, தொழிலா​ளர்​களை ஒப்​பந்த முறை​யில் அமர்த்​துதல், குறைந்​த​பட்ச ஊதிய நிர்​ண​யம் என்று பல முனை​களில், தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் கேட்​கப்​பட்​டுள்​ளன. சில​வற்​றில் வெற்​றி​யும் பெற்​றுள்​ளனர்.

நிறைவேற்​றப்​ப​டா​மல் இருக்​கிற கோரிக்​கைகளை வரும் காலங்​களில் வாதாடி பெற்​றுக்​கொள்ள முடி​யும் என்ற நம்​பிக்​கைக்கு உரிய அரசாக திமுக அரசும், நமது மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் மட்​டுமே களத்​தில் உள்​ளன.

அதி​முக, பாஜக​வுடன் கைகோர்த்​துள்ள நிலை​யில், இது வெறும் தேர்​தல் கூட்​டணி அல்ல; மாறாக, மாநில உரிமை​களைத் தாரை​வார்க்​கும் முயற்சி என்​பது தெளி​வாகி​விட்​டது.

மதவெறிக்​கும், சர்​வா​தி​காரத்​துக்​கும் எதி​ரான ஒரு மாற்​றுக் குரலை உறு​தி​செய்ய, ஜனநாயக சமநிலையை உரு​வாக்க, திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணிக்கு தமிழ்​நாட்​டின் மக்​கள் வாக்​களித்து பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்​டு​கிறோம்.

அனைத்து தொழிற்​சங்​கங்​களின் நிர்​வாகி​களும், தொழிலா​ளர்​களும் தமிழக வாக்​காளர்​கள் அனை​வரிட​மும் மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணிக்கு வாக்​களித்து வெற்றி பெறச் செய்ய வேண்​டிய அவசி​யத்தை விளக்கி விரி​வான தேர்​தல் பரப்​புரை செய்​ய​வும், களப்​பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு கூட்​டறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT