மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.

 
தமிழகம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

செய்திப்பிரிவு

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: மத்​திய அரசின் மக்​கள் விரோத சட்​டங்​களை திரும்ப பெற வலி​யுறுத்தி மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் பல்​லா​வரம், காஞ்​சிபுரம் பகு​தி​களில் போராட்​டம் நடை​பெற்​றது.

பல்​லா​வரம் அஞ்​சல​கம் முன்பு நடை​பெற்ற மறியலுக்கு சிஐடியு அகில இந்​திய செய​லா​ளர் ஆர்​.கரு​மலை​யான் தலைமை தாங்​கி​னார். இதில் தென்​சென்னை மாவட்​டத் தலை​வர் ஏ.முரு​கானந்​தம், பொருளாளர் ஏ.நட​ராஜன் மற்​றும் எம்​.சந்​திரன் (தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம்) உட்பட 600-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர்.

          

செங்​கல்​பட்டு இந்​தி​யன் வங்கி எதிரில் தொமுச மாநில துணைத் தலை​வர் பொன்​ராம் தலை​மை​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சீ.யூ மாநில துணை பொது செய​லா​ளர் கே.​திருச்​செல்​வன், ஏஐடியூசி மாவட்ட செய​லா​ளர் ஜகாங்​கீர், சிஐடி மாவட்ட செய​லா​ளர் க.பகத்​சிங் தாஸ் உட்பட 500-க்​கும் மேற்​பட்​டோரை காவல்​துறை​யினர் கைது செய்​தனர்.

காஞ்​சிபுரத்​தில் ரயில் மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. சென்னை கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து திரு​மால்​பூர் நோக்​கிச் சென்ற மின்​சார ரயிலை, காஞ்​சிபுரம் பழைய ரயில்வே நிலை​யம் அருகே வழிமறித்து மறியலில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் சிஐடி​யு, ஏஐடியூசி, தொழிலா​ளர் முன்​னேற்​றச் சங்​கம் உள்​ளிட்ட முக்​கிய தொழிற்​சங்​கங்​களைச் சேர்ந்த 500-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் கே.நேரு, சிஐடியு மாவட்​டச் செய​லா​ளர் முத்​துக்​கு​மார் உள்​ளிட்​டோர் இந்​தப் போராட்​டத்​துக்​கு தலைமை தாங்​கினர். தண்​ட​வாளத்​தில் இறங்கி போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்து போலீ​ஸார் விடு​வித்​தனர்.

கும்​மிடிப்​பூண்டி ரயில் நிலை​யத்துக்குள் போலீ​ஸாரின் தடையை மீறி நுழைந்த, தமிழ்​நாடு தென்னை விவ​சா​யிகள் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் துளசி​நா​ராயணன், சிஐடியு மாவட்ட துணைத்​தலை​வர் அர்​ஜுனன், ஏஐடி​யுசி மாவட்ட துணைத் தலை​வர் அருள் உள்ளிட்ட 200- க்கும் மேற்​பட்​டோர் ரயில்வே இருப்​புப் பாதை​யில் கோரிக்கை முழக்​கமிட்​டனர்.

திரு​வள்​ளூர், திருநின்​றவூர், திருத்​தணி, மீஞ்​சூர், பொன்​னேரி ஆகிய 5 ரயில் நிலை​யங்​களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியு மாநில துணைத் தலை​வர் விஜயன், மாநில குழு உறுப்​பினர் ராஜேந்​திரன்​,​ மாவட்ட செய​லா​ளர் ஏ.ஜி.சந்​தானம், ஏஐடி​யுசி மாவட்ட செய​லா​ளர் கஜேந்​திரன், ஐஎன்​டி​யுசி மாவட்ட செய​லா​ளர் ஜெய​பால், அகில இந்​திய விவ​சாய தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாவட்ட தலை​வர் தவமணி உள்​ளிட்ட 350-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர்.

செங்​குன்​றம், தாமரைப்​பாக்​கம், ஆர்கே பேட்டை ஆகிய 3 இடங்​களில் சாலை மறியலில் ஈடு​பட்ட ஏஐசிசிடியு மாநில துணை தலை​வர் ஜானகி​ராமன், ஆட்டோ சங்​கத்​தின் மாவட்ட செய​லா​ளர் சந்​திரசேகரன், விவ​சாய தொழிலா​ளர் சங்க மாவட்ட செய​லா​ளர் அ.து.கோ​தண்​டன், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் மாவட்ட செய​லா​ளர் சம்​பத் உள்​ளிட்ட 200-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​. கைது செய்​யப்​பட்​ட​வர்​கள்​ தனி​யார்​ திரு​மண மண்​டபங்​களில்​ தங்​க வைக்​கப்​பட்​டு ​மாலை​யில்​ ​விடு​விக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT