தமிழகம்

தமிழக உள்துறை செயலர் உள்பட முக்கிய துறை செயலர்கள் இடமாற்றம்

அனலி

சென்னை: தமிழக உள்துறை செயலர் உள்பட முக்கியத் துறைச் செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

தமிழக உள்துறை செயலர் கே.மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக கார்த்திக் ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.மணிவாசன் நில நிர்வாகத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அப்போதைய உள்துறைச் செயலர் தீரஜ்குமாரை மாற்றிவிட்டு கே.மணிவாசனை புதிய உள்துறை செயலராக நியமித்தது.

இந்நிலையில், இப்போது உள்துறை செயலர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக கார்த்திக் ஐஏஸ் உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், தேனி ஆட்சியர் வைத்திநாதன் மாற்றப்பட்டு அவர் குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி தேனி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் துறை செயலராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறை செலவின செயலராக அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறாக தலைமைச் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT