கொசஸ்தலையாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்.

 
தமிழகம்

கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்: மீனவர்கள் மறியல்

மாசுக்கட்டுப்பாடு, மீன்வள அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: மணலி, எண்​ணூர் பகு​தி​களில் மத்​திய, மாநில அரசுகளின் பொதுத்​துறை தொழிற்​சாலைகள், தனி​யார் தொழிற்​சாலைகள் இயங்கி வரு​கின்​றன.

இதனால் இப்​பகு​தி​ வழி​யாக செல்​லும் கொசஸ்​தலை​யாறு, எண்​ணூர் கழி​முக பகு​தி​கள் சுற்​றுச்​சூழல் பாதிப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றன.

கடல்​வாழ் உயி​ரினங்​களின் இனப்​பெருக்க பகு​தி​யாக விளங்​கும் எண்​ணூர் கழி​முகம், கொசஸ்​தலை​யாறு பகு​தி​களில் கடல்​வாழ் உயி​ரினங்​கள் முற்​றாக அழிந்​து, சுற்​றுச்​சூழல் கெடும் நிலை ஏற்​பட்​டிருப்​ப​தாக மீனவர்​கள் குற்​றம்​ சாட்டு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நேற்று எண்​ணூர் கழி​முகத்​துக்கு அருகே கொசஸ்​தலை​யாற்​றில் டன் கணக்​கில் மீன்கள் செத்து மிதந்​தன.

தொழிற்​சாலை ரசாயன கழி​வு​கள் ஆற்​றில் கலந்​த​தால் தான் மீன்​கள் இறந்​திருக்​கும் என மீனவர்​கள் குற்​றம்​சாட்​டினர். எண்​ணூர் பகு​தி​ மீனவர்​கள் எண்​ணூர்- தாழங்​குப்​பம் விரைவு சாலை​யில், இறந்த மீன்​களை சாலை​யில் கொட்​டி, சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

இது குறித்து மீனவர்​கள் கூறும்​போது, “எங்​களின் வாழ்​வா​தா​ரமே இந்த கொசஸ்​தலை​யாறும், எண்​ணூர் கழி​முக​மும் தான்.

இப்​பகு​தி​யில் மீன்​கள் இறப்​புக்கு இப்​பகு​தியை சுற்​றி​யுள்ள தொழிற்​சாலைகள் வெளி​யேற்​றும் கழி​வு​கள் தான் காரணம். எனவே கொசஸ்​தலை​யாறு மாசடை​யும்

பிரச்​சினைக்கு நிரந்தர தீர்​வு​காண வேண்​டும். வாழ்​வா​தா​ரத்தை இழந்த மீனவர்​களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும்.

விதி​மீறரில் ஈடு​பட்ட தொழிற்​சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றனர். இதற்​கிடை​யில் மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம், மீன்​வளத்​துறை அதி​காரி​கள் நேற்று, மீன்​கள் இறந்து கிடந்த பகு​தி​யில் ஆய்வு மேற்​கொண்​டு மீன் மாதிரி​களை​ சேகரித்து ஆய்​வுக்கு அனுப்​பி​யுள்​ளனர். முதற்​கட்ட ஆய்​வறிக்​கை​ அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய அதி​காரி​கள் கூறும்​போது, “மீன்​கள் இறந்த பகு​தி​யில் எண்​ணெய் கசிவு அல்​லது தொழிற்​சாலை கழி​வு​கள் ஆற்​றில் கலந்​ததற்​கான அறிகுறிகள் கண்​டறியப்​பட​வில்​லை.

இறந்த மீன் மாதிரி​கள் ஆய்​வுக்கு அனுப்​பப்​பட்ட நிலை​யில், முடிவு​கள் வந்த பிறகே, மீன்​கள் இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும்” என்​றனர்.

இது குறித்து பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஆற்​றில் செத்து மிதக்​கும் மீன்​களை அகற்றி அப்​பகு​தி​யில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தமிழக வாழ்​வுரிமை கட்​சித்தலை​வர் தி.வேல்​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பா​திக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு உடனடி நிவாரணத்​துடன்​,உரிய இழப்​பீடும்​ வழங்​க வேண்​டும்​” என தெரிவித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT