தமிழகம்

தேனாம்பேட்டை உள்ளிட்ட 3 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் பிர​தான குடிநீர் குழாய் பதிக்​கும் பணி​கள் நாளை காலை 10 மணி​முதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடை​பெறு​வ​தால் 3 மண்​டலங்​களில் குடிநீர் விநி​யோகம் இருக்​காது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீர் அகற்று வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், தேனாம்​பேட்டை மண்​டலம், நுங்​கம்​பாக்​கம் உத்​தமர் காந்தி சாலை​யில் பிர​தான குடிநீர் குழாய் இணைப்பு பணி​களை மேற்​கொள்​வ​தால் நாளை (ஜன.30) காலை 10 முதல், அடுத்த நாள் காலை 10 மணி வரை கோடம்​பாக்​கம், அடை​யாறு, தேனாம்​பேட்டை ஆகிய மண்​டலங்​களில் சில பகு​தி​களில் குழாய்​கள் மூலம் வழங்​கப்​படும் குடிநீர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்​படு​கிறது.

          

அதன்​படி, தேனாம்​பேட்டை மண்​டலத்​தில் சூளைமேடு, வள்​ளுவர் கோட்​டம், ஆயிரம் விளக்​கு, கோடம்​பாக்​கம் (பகு​தி), நுங்​கம்​பாக்​கம், தியாக​ராயநகர், கோபாலபுரம், சிஐடி காலனி, மயி​லாப்​பூர் (பகு​தி), நந்​தனம், ஆழ்​வார்​பேட்டை ஆகிய இடங்​களி​லும், கோடம்​பாக்​கம் மண்​டலத்​தில் வடபழனி (பகு​தி), மேற்கு மாம்​பலம், கோடம்​பாக்​கம், சைதாப்​பேட்​டை, சிஐடி நகர்.

அடை​யாறு மண்​டலத்​தில் சைதாப்​பேட்டை ஆகிய இடங்​களில் குடிநீர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்பட உள்​ளது. எனவே பொது​மக்​கள் முன்​னெச்​சரிக்​கை​யாக, வேண்​டிய அளவு குடிநீரை சேமித்து வைத்​துக்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

அவசரத் தேவை​களுக்கு லாரி​கள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்​றுக்​கொள்ள வாரி​யத்​தின் https://cmwssb.tn.gov.in என்ற இணை​யதள முகவரியை பயன்​படுத்தி பதிவு செய்து பெறலாம்.

குடிநீர் இணைப்பு இல்​லாத பகு​தி​கள் மற்​றும் அழுத்​தம் குறை​வான பகு​தி​களுக்கு குடிநீர் தொட்​டிகள் மற்​றும் தெரு நடைகளுக்கு லாரி​கள் மூலம் வழங்​கப்​படும் குடிநீர் எந்​த​வித தடை​யுமின்றி வழக்​கம்​போல் சீரான முறை​யில் மேற்​கொள்​ளப்​படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT