தமிழகம்

சென்னையில் நாளை 1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழு​வதும் தீவிர கூடு​தல் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஜூன் 28) நடை​பெறுகிறது. பொது​மக்​கள் தங்​கள் வீட்​டின் அரு​கில் உள்ள சொட்டு மருந்து மையத்​துக்​குச் சென்​று, குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து போட்​டுக்​கொள்​ளலாம்.

போலியோ சொட்டு மருந்து போடு​வ​தால் எந்​த​வித தீங்​கும் கிடை​யாது. சென்னை மாநகரில் 5 வயதுக்கு உட்​பட்ட சுமார் 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 1,641 சொட்டு மருந்து மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

குறிப்​பாக மாநக​ராட்சி நகர சமு​தாய நல்​வாழ்வு மையங்​கள், நகர ஆரம்ப சுகா​தார மையங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், பள்​ளி​கள், சத்​துணவு மையங்​கள், தனி​யார் மருத்​து​வ​மனை​கள், ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் மெரினா கடற்​கரை, கோயம்​பேடு புறநகர் பேருந்து நிலை​யங்​கள் உள்​ளிட்​ட​வற்​றில் போலியோ சொட்டு மருந்து மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இம்​மு​காம்​கள் காலை 7 மணிக்கு தொடங்​கி மாலை 5 மணிவரை தொடர்ந்து நடை​பெறும். இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இதற்​காக பால​வாக்​கம் அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னேற்​பாடு​களை, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேரில் ஆய்​வு செய்​து, ஆலோ​சனை​களை வழங்​கி​னார்​.

SCROLL FOR NEXT