சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில் ஒவ்வோர் ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஆண்டு தோறும் ஏப்.1-ம் தேதி கட்டணம் மாற்றப்படுகின்றது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளுக்கு அருகே 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கான மாதாந்திர சுங்கச்சாவடி பாஸுக்கான கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 3-வது முறையாக உயர்த்தியுள்ளது. மொத்தத்தில் ஏப்ரல் 1-ம் தேதிமுதல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.