தமிழகம்

திருச்சி கிழக்கில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்: பிரச்சாரம் செய்ய 51 கட்டுப்பாடுகள்

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி கிழக்கு தொகு​தி​யில் தவெக வேட்​பாள​ராக போட்​டி​யிட​விருக்​கும் அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் இன்று (ஏப்​.2) திருச்​சி​யில் வேட்​புமனு தாக்​கல் செய்​து, காந்தி மார்க்​கெட் பகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

இதற்​காக அவருக்கு காவல்​துறை சார்​பில் 51 கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. தவெக தலை​வர் விஜய் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு என 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறார்.

          

இதில், பெரம்​பூர் தொகு​தி​யில் கடந்த 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் செய்​தார். இதைத் தொடர்ந்​து, திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட பாலக்​கரை பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் முத்து முரு​கேச​பாண்​டி​யிடம் இன்​று(ஏப்​.2) வேட்​புமனு தாக்​கல் செய்ய உள்​ளார்.

தொடர்ந்து காந்தி மார்க்​கெட் பகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளார். இதற்கு உரிய பாது​காப்பு வழங்​கக் கோரி தவெக நிர்​வாகி​கள் செங்​கோட்​டையன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருச்சி காந்தி மார்க்​கெட் காவல்​நிலை​யத்​தில் மனு அளித்​தனர்.

அதன் பின்​னர், பிரச்​சாரம் செய்​யும் இடத்தை பார்​வை​யிட்​டனர். அதைத்​தொடர்ந்​து, செங்​கோட்​டையன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: ஒரு அரசி​யல் கட்​சித் தலை​வர் 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வது வாடிக்​கை​யான ஒன்​று.

அதி​முக பொதுச் செய​லா​ள​ராக இருந்த ஜெயலலி​தா​வும் 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டுள்​ளார். அப்​படி போட்​டி​யிட ஜனநாயகத்​தில் அனை​வருக்​கும் உரிமை உள்​ளது.

திருச்சி காந்தி மார்க்​கெட் பகு​தி​யில் விஜய் பிரச்​சா​ரம் செய்ய 51 கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. அதை நாங்​கள் ஏற்​றுக்​கொண்​டுள்​ளோம். உரிய பாது​காப்பு அளிப்​ப​தாக காவல் துறை​யினரும் தெரி​வித்​தனர் என்​றார்​.

SCROLL FOR NEXT