தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

எஸ்.விஜயகுமார்

சேலம்: லாரி​களுக்​கான தகு​திச்​சான்​றிதழ் புதுப்​பிப்​புக் கட்​ட​ணத்தை குறைக்க வலி​யுறுத்தி டெல்டா மாவட்​டங்​களில் இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றன.

இது தொடர்​பாக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளனத் தலை​வர் தனராஜ் சேலத்​தில் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம், அனைத்து வாக​னங்​களுக்​கும் தகு​திச் சான்​றிதழ் கட்​ட​ணத்தை டிச. 17-ல் உயர்த்​தி​யது.

          

அதன்​படி, லாரி​களுக்​கான தகு​திச் சான்​றிதழ் புதுப்​பிப்​புக் கட்​ட​ணம் கடுமை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ரூ.850-ல் தொடங்கி ரூ.28,200 வரை உயர்ந்​துள்​ளது. வாகன பரிசோதனை மையங்​களில் சோதனை செய்​யப்​படும்​போது, இந்​தக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் வாகன பரிசோதனை மையங்​களே இல்லை என்ற போதி​லும், கட்டண உயர்வு அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. லாரி​களுக்​கான தகு​திச் சான்​றிதழ் கட்​ட​ணத்தை குறைக்க வேண்​டும், அது​வரை மத்​திய அரசின் உத்​தரவை நிறுத்தி வைக்க வேண்​டுமென பலமுறை கோரிக்கை விடுத்​தும், இது​வரை கோரிக்கை ஏற்​கப்​பட​வில்​லை. கட்டண உயர்​வால் தகு​திச் சான்​றிதழ் பெற முடி​யாமல் ஒரு லட்​சம் லாரிகள் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

குறிப்​பாக, டெல்டா மாவட்​டங்​களில் உள்ள லாரி உரிமை​யாளர்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில், முதல்​கட்​ட​மாக டெல்டா மாவட்​டங்​களில் இன்று (பிப். 16) முதல் கால​வரையற்ற வேலை நிறுத்​தம் தொடங்​கப்​படு​கிறது.

தமிழகம் முழுவதும்... நாமக்​கல்​லில் நாளை (பிப். 17) நடை​பெறும் சம்​மேளன செயற்​குழுக் கூட்​டத்​தில், எங்​களது கோரிக்​கையை வலி​யுறுத்​தி, தமிழகம் முழு​வதும் லாரிகள் கால​வரையற்ற வேலைநிறுத்​தத்​தில் ஈடு​படு​வது குறித்து முடிவு செய்​யப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT