கோப்புப் படம்

 
தமிழகம்

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் முக்​கிய​மான வேளச்​சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக்​கு​மார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்​ய​வுள்​ளார்.

சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் வகை​யில், பறக்​கும் ரயில் வழித்தட திட்​டப்​பணி, 2008-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது.

          

ஆனால் ஆதம்​பாக்​கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் ஏற்​பட்ட பிரச்​சினை​யால் பணி​கள் முடங்​கின. கடந்த 2022-ம் ஆண்​டுக்​குப் பிறகு மீண்​டும் பணி​கள் தொடங்​கி, சில மாதங்​களுக்கு முன்​பாக முடிந்​தன.

இதையடுத்து வேளச்​சேரி - பரங்​கிமலைக்கு கடந்த ஆண்டு நவ.7-ல் 10 பெட்​டிகளு​டன் சரக்கு ரயிலும், டிச.15-ல் ஒரு சரக்கு ரயிலும் அடுத்​தடுத்து இயக்கி சோதிக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக, ரயில்வே பாது​காப்பு ஆணை​யருக்கு அறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

பின்​னர், அவரின் பரிந்​துரைகளை ஏற்​று, திருத்​தம் செய்து மீண்​டும் அறிக்கை அனுப்​பப்​பட்​டது. இதற்​கிடை​யில், வேளச்​சேரி - பரங்​கிமலை ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி மின்​சார ரயில் சேவை தொடங்​கப்​படும் என்று தெற்கு ரயில்வே அறி​வித்​தது.

இதைத்​தொடர்ந்து புழு​தி​வாக்​கம், ஆதம்​பாக்​கம் ஆகிய ரயில் நிலை​யங்​களில் டிக்​கெட் வழங்​கும் வசதி உட்பட பல்​வேறு வசதி​களை ரயில்வே அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். பயணி​களுக்​கான அடிப்​படை வசதி​களை ஏற்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், வேளச்​சேரி - பரங்​கிமலை ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக்​கு​மார் கர்க் நாளை (மார்ச் 5) ஆய்வு செய்​ய​வுள்​ளார்.

இதுகுறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக்​கு​மார் கர்க் புதன்​கிழமை, புதுடெல்​லியி​லிருந்து சென்​னைக்கு 3 நாட்​கள் பயண​மாக வரு​கிறார். சென்​னை​யில் வேளச்​சேரி - பரங்​கிமலை இடையே ரயில் பாதையை 2 நாட்​கள் ஆய்வு செய்​கிறார். டிராலி மற்​றும் ரயி​லில் சோதனை மேற்​கொள்​ளவுள்​ளார்.

அப்​போது ரயில் தண்​ட​வாளம், சிக்​னல் அமைப்​பு, கட்​டு​மானம் உள்​ளிட்ட பாது​காப்பு அம்​சங்​களை ஆய்வு செய்​கிறார். தொடர்ந்து ரயில் நிலை​யங்​களி​லும் ஆய்வு செய்​கிறார். மார்ச் 5-ம் தேதி பிற்​பகல் 1:30 முதல் மாலை 6 மணி வரை அதிவேக சோதனை ஓட்​டம் நடத்​தப்​படு​கிறது. மார்ச் 6-ம் தேதி நந்​தனத்​தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துக்​குச் சென்​று பார்​வை​யிடு​கிறார்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT