தமிழகம்

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்​பூர் - விழுப்​புரம் மார்க்​கத்​தில் காட்​டாங்​குளத்​தூர் யார்​டில் பொறி​யியல் பணி நடைபெறுவதால், கடற்​கரை - செங்​கல்​பட்டு இடையே மின்​சார ரயில் சேவையில்​ இன்று மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது.

இதன்​படி, சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு இன்று (25-ம் தேதி) காலை 10.56, பகல் 11.40, நண்​பகல் 12.28 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், கூடு​வாஞ்​சேரி -செங்​கல்​பட்டு இடையே பகுதி ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன.

சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு நண்​பகல் 12.40 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில், தாம்​பரம் - செங்​கல்​பட்டு இடையே பகுதி ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு - சென்னை கடற்​கரைக்கு இன்று நண்​பகல் 12, மதி​யம் 1.10, 1.45 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில், செங்​கல்​பட்டு - கூடு​வாஞ்​சேரி இடையே பகுதி ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன.

செங்​கல்​பட்டு - சென்னை கடற்​கரைக்கு மதி​யம் 2.20 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில், செங்​கல்​பட்டு - தாம்​பரம் இடையே பகுதி ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT