கோப்புப் படம்
சென்னை: குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்றிரவு வெளியிட்டது. இதன்மூலம் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி அக்டோபர் 6-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு அக்.6 முதல் நவம்பர் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களைத் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர், பில் கலெக்டர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளில் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.