கோப்புப்படம்

 
தமிழகம்

மின் தடைக்கு தீர்வு காண புதிய திட்டம்: அதிகாரிகளுக்கு மின் வாரிய தலைவர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் தொடர் மின் தடை ஏற்​படும் இடங்​களில் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்​டத்தை செயல்​படுத்த அதி​காரி​களுக்கு மின் வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழகம் முழு​வதும் தொடர்ச்​சி​யாக மின் தடங்​கல் ஏற்​படும் இடங்​களில் அவற்றை நிரந்​தர​மாக தடுக்க ‘ரிப்​பீட் டிரிப்​பிங் எலிமினேஷன் புரோகி​ராம் (Repeat Tripping Elimination Programme - RTEP) என்ற புதிய திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்​து​மாறு தமிழ்​நாடு மின்​வாரிய தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் அனைத்து தலை​மைப் பொறி​யாளர்​கள் மற்​றும் மின்​வாரிய அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

இது குறித்து அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் சில துணை மின் நிலை​யங்​கள், மின் வழித்​தடங்​கள் மற்​றும் மின் வலை​யமைப்​பு​களில் தொடர்ந்து மீண்​டும் மீண்​டும் மின் தடை ஏற்​படு​வ​தாக​ புகார்கள் எழுந்துள்ளன. இத்​தகைய இடங்​களை கண்​டறிந்​து, அதன் மூல காரணத்தை பகுப்​பாய்வு செய்து அறி​வியல் ரீதி​யாக ஆய்​வு​களை மேற்​கொண்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதற்​காக மாநில அளவி​லான நிபுணர் குழு மற்​றும் ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு குழு​வும் செயல்​படும்.

மேலும், 85 சதவீதத்​திற்​கும் அதி​க​மாக நிறைவடைந்​துள்ள புதிய துணை மின் நிலை​யங்​கள் மற்​றும் மின் கட்​டமைப்பு பணி​களை விரை​வாக பயன்​பாட்​டுக்கு கொண்டு வர வாரந்​தோறும் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும். இதன் மூலம் மின் வலை​யமைப்​பின் நம்​பகத்​தன்மை அதி​கரித்​து, மீண்​டும் மீண்​டும் ஏற்​படும் மின் தடைகள் குறை​யும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT