மதம் மாறிய​வருக்கு பிசி-​முஸ்​லிம் என சாதிச் சான்​றிதழ்: அரசாணை ரத்துக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மேல்​முறை​யீடு

மதம் மாறிய​வருக்கு பிசி-​முஸ்​லிம் என சாதிச் சான்​றிதழ்: அரசாணை ரத்துக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மேல்​முறை​யீடு
Updated on
1 min read

புதுடெல்லி: மதம் மாறிய​வருக்கு பிசி-​முஸ்​லிம் எனச் சாதிச் சான்​றிதழ் வழங்​கும் அரசாணையை ரத்து செய்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​துள்​ளது.

தூத்​துக்​குடி தெற்கு இலந்தை குளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர் கடந்த 2015-ல் முஸ்​லிம் மதத்​துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்​றிக் கொண்​டார். அதன்​பின்​னர், பிற்​படுத்​தப்​பட்​டோர் முஸ்​லிம் பிரி​வில் ‘முஸ்​லிம் லெப்​பை’ எனச் சான்​றிதழ் கேட்டு விண்​ணப்​பித்​தார்.

அவரது மனு நிராகரிக்​கப்​பட்ட நிலை​யில், முஸ்​லிம் லெப்பை எனச் சான்​றிதழ் வழங்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி. ஆர். சுவாமி​நாதன், பி.பி. பாலாஜி அடங்​கிய அமர்வு கடந்த ஜூன் 25-ம் தேதி பிறப்​பித்த உத்​தர​வில், ‘சென்னை உயர் நீதி​மன்​றம் 75 ஆண்​டு​களுக்கு முன்பு பிறப்​பித்த உத்​தர​வில், முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வுடன் ஒரு​வர் முஸ்​லிம் ஆகிறார் என்று கூறப்​பட்​டுள்​ளது. அவரை ஒரு குறிப்​பிட்ட பிரிவுக்​குள் அடக்க முடி​யாது. இந்த உத்​தரவு அமலில் இருக்​கும்​போது, வெறும் அரசாணை​யால் நீதி​மன்ற உத்​தரவை மாற்​றியமைக்க முடி​யாது.

முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வர்​கள் ஏதேனும் ஒரு வகை​யான இடஒதுக்​கீட்​டுப் பலனைத் தொடர்ந்து பெறு​வதை உறுதி செய்ய மட்​டுமே மாநில அரசு இத்​தகைய அணுகு​முறையை மேற்​கொண்​டுள்​ளது. எனவே, தமிழக அரசு கடந்த 2024 மார்ச் 9-ம் தேதி பிறப்​பித்த அரசாணை அரசமைப்​புச் சட்​டத்​துக்கு முரணானது என்​ப​தால் அந்த அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது’ என்று தீர்ப்​பளித்​தனர்.

இதனிடையே, இத்​தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு அரசின் சார்​பில் வழக்​கறிஞர் பி. கருணாகரன் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

அதில், ‘இந்த விவ​காரத்​தில் சென்னை உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை அனைத்து அம்​சங்​களை​யும் கருத்​தில் கொள்​ள​வில்​லை. மதம் மாறிய​வருக்கு பிசி-​முஸ்​லிம் எனச் சாதிச் சான்​றிதழ் வழங்​கும் அரசாணையை ரத்து செய்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்க வேண்​டும்’ என்று கோரப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு அரசின் மேல்​முறை​யீடு மனுவை விசா​ரிக்​கும்​போது தங்​களது தரப்பு கருத்​தைக் கேட்​கக் கோரி சயீது இப்​ராஹிம் சார்பில் வழக்​கறிஞர் பி.​வி. யோகேஸ்​வரன், எச். முகமது இஸ்மாயில் சார்​பில் வழக்​கறிஞர் பக்தி வரதன்​ சிங்​ கேவியட்​ மனுக்​களைத்​ தாக்​கல்​ செய்​துள்​ளனர்​.

மதம் மாறிய​வருக்கு பிசி-​முஸ்​லிம் என சாதிச் சான்​றிதழ்: அரசாணை ரத்துக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மேல்​முறை​யீடு
சென்னை அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in