சென்னை: நீர்வளத் துறையின் செயலராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரத சாஹூ மாற்றப்பட்டு, புதிய செயலராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, தமிழகத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், துறை செயலர் மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: நீர்வளத் துறை செயலராக இருந்த சத்யபிரத சாஹூ மாற்றப்பட்டு அவருக்கு பதில், ஊரக வளர்ச்சித் துறை செயலராக பணியாற்றி வரும் பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை பிரசாந்த் வடநரே ஊரக வளர்ச்சித் துறை செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.