தமிழகம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்பு

பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வேலை​யில்லா பட்​ட​தா​ரி​களுக்கு வழங்​கப்​படும் உதவித் தொகை ரூ.4 ஆயிர​மாக உயர வாய்ப்​புள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக வரும் பட்​ஜெட்​டில் அறி​விப்பு வெளி​யாகும் எனவும் தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் அரசுத் துறை​கள் சார்​பில் 721 பேருக்கு நலத்திட்ட உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. ஆட்​சி​யர் எம்​.அருணா தலைமை வகித்​தார். பயனாளி​களுக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் தங்​கி​யுள்ள பிற மாநில தொழிலா​ளர்களின் விவரங்​கள் அரசிடம் உள்​ளன. மாவட்​டம்​தோறும் அதி​காரி​களும் கணக்​கெடுப்பு நடத்தி வரு​கின்​றனர்.

சிவ​காசி பட்​டாசு ஆலை தொழிலா​ளர்​களுக்​குப் பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கு​வது உள்​ளிட்ட தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் குறித்து அரசு பரிசீலித்து வரு​கிறது. தேர்​தல் வாக்​குறு​தி​கள் அனைத்​தை​யும் உரிய காலத்​துக்​குள் நிறைவேற்ற வேண்​டும் என முதல்​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதனடிப்​படை​யில், வேலை​யில்லா பட்​ட​தா​ரி​களுக்கு வழங்​கப்​படும் உதவித் தொகை ரூ.4 ஆயிர​மாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான அறி​விப்பு வரும் பட்​ஜெட்​டில் வெளி​யாக வாய்ப்பு உள்​ளது.

மேலும், தேயிலைத் தோட்ட நல வாரிய தொழிலா​ளர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட பணப்பலன்​கள் வழங்​கு​வது குறித்து அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT