சென்னை: தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக போடப்பட்ட 600 வழக்குகளில் இருந்து 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது கடந்த செப்.2-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் உத்தரவின்படி 2021 மே முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெறுவது தொடர்பாக உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆசிரியர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து தற்போது ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.