தமிழகம்

தொழில் நிறுவனங்கள் இடையே டிஜிட்டல் பரிமாற்றம், ஏஐ பயன்பாட்டை விரைவுபடுத்த கூட்டு முயற்சி: சென்னை ஐஐடி-யுடன், தமிழக அரசு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் ​நிறு​வனங்​கள் இடையே டிஜிட்​டல் பரி​மாற்​றம், ஏஐ பயன்​பாடு, திறன்​மேம்​பாடு ஆகிய​வற்றை படுத்​தும் வகை​யில், சென்னை ஐஐடி-​யுடன் தமிழக அரசின் வழி​காட்​டல் மையம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக, சென்னை ஐஐடி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தமிழகத்​தில் உள்ள குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு இடையே டிஜிட்​டல் பரி​மாற்​றம், ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறிவு, திறன்​மேம்​பாடு ஆகிய​வற்றை விரைவுபடுத்​தும் நோக்​கில், சென்னை ஐஐடி​யுடன், தமிழக அரசின் குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களின் வழி​காட்​டல் முகமை இணைந்து செயல்பட உள்​ளது.

இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம், தமிழக அரசின் வழி​காட்​டல் மையம் - ஐஐடி தொழில்​நுட்ப உயர் சிறப்பு மையம் இடையே கையெழுத்​தானது.

வால்​மார்ட் குளோபல் டெக் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு நிதி (சிஎஸ்​ஆர்) உதவி​யுடன் இந்த கூட்டு முயற்சி மேற்​கொள்​ளப்​படும். குறு, சிறு, நடுத்தர தொழில்​ நிறு​வனங்​களுக்கு தேவைப்​படும் தொழில்​நுட்ப தீர்​வு​கள் குறைந்த செல​வில் உரு​வாக்​கப்​படும்.

உள்​நாட்​டிலேயே உரு​வாக்​கப்​படும் டிஜிட்​டல் தீர்​வு​களை​யும், தொழில்​நுட்ப பரி​மாற்​றத்​தை​யும், செயல்​பாடு​களை​யும் எளி​தாக்​கும். இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மூலம், அரசு கல்வி நிறு​வனங்​கள் தொழில் துறை​யுடன் இணைந்த கூட்டு கண்​டு​பிடிப்பு உள்​கட்​டமைப்பு உரு​வாக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது

இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் குறித்​து, ஐஐடி பேராசிரியர் ரகு​நாதன் ரங்​க​சாமி கூறும் போது, "வாகன உற்​பத்​தி, பொறி​யியல் கட்​டமைப்பு தயா ரிப்பு உள்பட பல்​வேறு துறை​களைச் சேர்ந்த சிறிய மற்​றும் நடுத்தர உற்​பத்தி நிறு​வனங்​களின் திறனை அதி​கரிப்​பதும், தயாரிப்​பு​களின் தரத்தை உயர்த்​து​வதும், அவற்​றின் சர்​வ​தேச போட்​டித் தன்​மையை வலுப்​படுத்​து​வதும் இந்த ஒப்​பந்​தத்​தின்தலை​யாய நோக்​கம். இந்தகூட்​டு​முயற்​சி, உள்​ளூர் தேவை​களுக்கு ஏற்ப தொழில்​நுட்​பத் தீர்​வு​கள் வடிவ​மைக்க உதவும்.

அதோடு, தமிழக தொழில்​துறை சூழலுக்கு ஏற்ப பிரத்​யேக​மாக வடிவ​மைக்​கப்​பட்ட குறைந்த செலவி​லான மற்​றும் உள் ​நாட்டு டிஜிட்​டல் தீர்​வு​களை குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் பின்​பற்ற வசதி​யாக தொடர் பயிற்​சிகள் நேரடி டிஜிட்​டல் செயல்​முறை பயிற்சி வழங்​க​வும் வகை செய்​யும். இதன்​மூலம், தொழில்​முனை​வோர், மேற்​பார்​வை​யாளர், தொழிற்​சாலை பணி​யாளர்​களின் டிஜிட்​டல் திறன்​ மேம்​படும்​" என்​றார்​.

SCROLL FOR NEXT