தமிழகம்

விவசாயிகளுக்கு ஊரக தொழில் கடனாக ரூ.5,000 கோடி வழங்க தமிழக அரசு இலக்கு: அமைச்சர் காந்திராஜ் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கூட்​டுறவுத் துறை அமைச்​சர் காந்​தி​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசின் 2026–27-ம் ஆண்​டுக்​கான கூட்​டுறவுத் துறை மானியக் கோரிக்​கை​யில் வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி விவ​சா​யிகள், அது​சார்ந்த தொழில்​களில் ஈடு​படும் சிறு, குறு விவ​சா​யிகளின் வரு​வாயை அதி​கரிக்​கும் நோக்​கில் ரூ.5,000 கோடி​யில் ஊரகத் தொழில் கடன் ஆண்​டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்​தில் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தத் திட்​டத்​தின்​படி, ஒரு பயனாளிக்கு அதி​கபட்​ச​மாக ரூ.5 லட்​சம் வரை கடன் வழங்​கப்​படும். கடன் வழங்​கிய நாளில் இருந்​து, 36 மாதங்​களுக்​குள் வட்​டி​யுடன் கடனைத் திருப்​பிச் செலுத்த வேண்​டும். மேலும், தேவைக்​கேற்ப 3 முதல் 6 மாதங்​கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்​கப்​படும்.

இந்த நிதி​யாண்​டில் இத்​திட்​டத்​தின்​கீழ், மாவட்ட மத்​தி​யக் கூட்​டுறவு வங்​கி​கள் மூலம் ரூ.2,000 கோடி​யும், தொடக்க வேளாண்​மைக் கூட்​டுறவு கடன் சங்​கங்​கள் மூலம் ரூ.3,000 கோடி​யும் என மொத்​தம் ரூ.5,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் குறு விவ​சா​யிகள், பெண் விவ​சா​யிகள் மற்​றும் விளிம்​புநிலை பிரி​வினருக்கு முன்​னுரிமை அளிக்​க​வும், கடன் வசூல் நடவடிக்​கைகளைக் கண்​காணிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

எனவே, விவ​சா​யிகள் மற்​றும் விவ​சா​யம் சார்ந்த தொழில்​களில் ஈடு​படும் சிறு, குறு விவ​சா​யிகள் தங்​கள் வரு​வாயை அதி​கரிக்​கும் நோக்​கில் செயல்​படுத்​தப்​படும் இந்த ஊரகத் தொழில் கடன் திட்​டத்​தின்​கீழ் பயன்​பெறலாம். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT