தமிழகம்

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டம்? - கல்வித்தகுதி விவரங்கள் சேகரிப்பு

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை வரு​வாய்த் துறை​யினர் சேகரித்து சென்​னைக்கு அனுப்பிவைத்​துள்​ளனர். முதல்​வர் விஜய் கரூர் வரும்​போது அவர்​களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்​தாண்டு செப்​.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் நிவாரண​மாக வங்கிக் கணக்​கு​களில் வரவு வைக்​கப்​பட்​டது. இதையடுத்​து, உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களை மாமல்​லபுரத்​துக்கு வரவழைத்து விஜய் ஆறு​தல் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், ஜூலை 10-ம் தேதி முதல்​வர் கரூர் வருகை தர உள்​ளார். அப் போது, ஆட்​சி​யர் அலு​வல​கத்தில் நடை​பெறும் விழா​வில் நலத்திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். அப்​போது, கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை முதல்​வர் சந்​தித்​து, அவர்​களின் குடும்​பங்​களில் தலா ஒரு​வருக்கு தகுதி அடிப்​படை​யில் அரசு பணிக்​கான ஆணை​களை வழங்க உள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதற்​காக, கரூர் மாவட்ட வரு​வாய்த் துறை மூலம் 41 பேர் குடும்​பங்​களில் உள்ளவர்​களின் கல்​வித் தகு​தி, வயது உள்​ளிட்ட விவரங்​களும் சேகரிக்​கப்​பட்​டு, சென்​னைக்கு அனுப்​பியுள்​ள​தாக வரு​வாய்த் துறை​யினர் தெரி​வித்​தனர். இதுகுறித்து கூட்ட நெரிசலில் மனை​வி, மகளை இழந்த ஏமூரைச் சேர்ந்த சக்​திவேல் கூறும்போது, “கரூர் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் எனது கல்​வித் தகுதி உள்​ளிட்ட விவரங்​களை வழங்​கி​யுள்​ளேன்​” என்​றார்​.

SCROLL FOR NEXT