சேலம் மாவட்டம் வைகுந்தம் அருகே மாற்றுக்கட்சியினர் பாமகவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசினார்.

 
தமிழகம்

தமிழக விவசாயிகளுக்கு கர்நாடகா ரூ.1,000 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: அன்புமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

சேலம்: மேட்​டூர் அணைக்கு உரிய நேரத்​தில் தண்​ணீர் திறந்து விடாத​தால் தமிழக விவ​சா​யிகளுக்கு ஏற்​பட்​டுள்ள ரூ.1,000 கோடி இழப்பை கர்​நாடக அரசு தர வேண்​டும் என வலி​யுறுத்தி தமிழக அரசு வழக்கு தொடர வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் தெரி​வித்​தார்.

சேலம் மாவட்​டம் மகுடஞ்​சாவடி அருகே பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் பாமக​வில் இணை​யும் விழா நடந்​தது. இதில் அன்​புமணி பேசி​ய​தாவது: காவிரி பிரச்​சினை, மேகே​தாட்டு பிரச்​சினைக்​காக அனைத்​துக் கட்சி கூட்​டத்தை தமிழக முதல்​வர் கூட்ட வேண்​டும். மேட்​டூர் அணைக்கு கடந்த மூன்று மாதத்​தில் 70 டிஎம்சி தண்​ணீர் வந்​திருக்க வேண்​டும். ஆனால், 7 டிஎம்சி தண்​ணீர் மட்​டுமே வந்​திருக்​கிறது.

ஜூன் 12-ல் நீர் திறக்​காத​தால் தமிழக விவ​சா​யிகளுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இழப்​பீ​டாக கர்​நாடக அரசு ரூ.1,000 கோடி தர வேண்​டும் என விவ​சாய சங்​கங்​கள் மூலம் தமிழக அரச உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு போட வேண்​டும்.

திமுக ஆட்​சி​யில் அனைத்து துறை​களி​லும் ஊழல் நடந்​திருக்​கிறது. இதில் நிச்​சய​மாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். முல்லை பெரி​யாறு அணை நீர்​மட்​டம் 152 அடி​யாக உயர்த்​தலாம் என்று உச்ச நீதி​மன்​றம் கூறி​யும் உயர்த்த விடா​மல் தடுக்​கிறார்​கள். வரும் 2036-ம் ஆண்டு தமிழகத்​தில் பாமக ஆட்சி உறு​தி​யாக அமை​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT