தமிழகம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; 2 வாரங்களில் அரசாணை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் தொடர்பாக 2 வாரங்​களில் அரசாணை பிறப்​பிக்​கப்​படும் என்று உயர் நீதி​மன்​றத்​தில் அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து​விட்​டு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விடக் கோரி திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த பிரடெரிக் எங்​கெல்ஸ் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

அதில், “அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​களுக்​கான பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்கு இது​வரை விதி​முறை​கள் வகுக்​கப்​பட​வில்​லை. மத்​திய அரசு 2013-ல் அமைத்த ஓய்​வூ​திய நிதி ஒழுங்​காற்று மேம்​பாட்டு ஆணை​யத்​தை​யும் பின்​பற்​ற​வில்​லை.

ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பான வல்​லுநர் குழு​வின் பரிந்​துரைகளைப் பின்​பற்​று​வது தொடர்​பாக அரசாணை​யோ, விதி​முறை​களோ வகுக்​கப்​பட​வில்​லை.

இதனால், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் பலன்​களைப் பெற முடி​யாமல் அரசு ஊழியர்​கள் தவிக்​கின்​றனர். எனவே, பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பாக தமிழக அரசின் நிலைப்​பாட்டை தெரிவிக்​கு​மாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். மனு மீண்​டும் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கலைமதி அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் காணொலி வழி​யாக ஆஜராகி, “தமிழக அரசு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் அடிப்​படை​யில் தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத்திட்​டத்தை அறி​வித்​துள்​ளது. இத்​திட்​டம் தொடர்​பாக இரு வாரங்​களில் அரசாணை பிறப்​பிக்​கப்​படும்” என்​றார். இதையடுத்​து, விசா​ரணையை நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​தனர்.

SCROLL FOR NEXT