தமிழகம்

மகளிருக்கான சிங்கப்பெண் மேம்பாட்டு திட்டம்: ரூ.7,000 கோடி கடன் வழங்க தமிழக அரசு முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இது தொடர்​பாக துறை​கள் வாரி​யாக முதல்​வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ஆலோ​சனைக் கூட்​டங்​களை நடத்​திவரு​கிறார்.

அதன்​படி சட்​டம் மற்​றும் சிறை​கள் சீர்​திருத்​தப் பணி​கள் துறை​யின் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் சி.டி.ஆர்​.நிர்​மகு​மார், நெ.மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும் துறை​ சார்ந்த செயலர்​கள், அதி​காரி​கள் பங்கேற்றனர்.

கூட்​டத்​தில் சட்​டத்​ துறை​யில் நடை​பெற்று வரும் திட்​டப் பணி​களின் செயல்​பாடு​களை கேட்​டறிந்த முதல்​வர் விஜய், சிறை​களின் கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​த​வும் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே கூட்​டுறவுத் துறை குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த வாரம் நடை​பெற்​றது. இதில் இளம் பெண்​கள் சுயத்​தொழில்​கள் தொடங்க 'சிங்கப்பெண்' மேம்​பாட்​டுத் திட்​டத்​தைச் செயல்​படுத்த தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதற்​காக கூட்​டுறவுத்​துறை மூல​மாக மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.7,000 கோடி வட்​டி​யில்லா கடன் வழங்​கப்பட உள்​ளது. வரும் பட்​ஜெட்​டில் இதுகுறித்த அறி​விப்​பு வெளி​யாகும் என்று கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT