தமிழகம்

திருவள்ளுவர், அண்ணா, திருவிக பெயரிலான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

ஜன.16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் அண்ணா விருது அமைச்​சர் துரை​முரு​க​னுக்​கும், திருவிக விருது முன்​னாள் தலை​மைச்​செயலர் வெ.இறையன்​புவுக்​கும் அறி விக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர பல்​வேறு விருதுகளும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருக்​குறள் நெறிபரப்​புவோருக்​கான திரு​வள்​ளுவர் விருது, இந்​தாண்​டு மு.பெ.சத்​தி​ய​வேல் முரு​க​னாருக்கு வழங்​கப்​படு​கிறது.

அதே​போல் கடந்த 2025-ம் ஆண்​டுக்​கான தந்தை பெரி​யார் விருது வழக்​கறிஞர் அ.அருள்​மொழிக்​கும் அண்​ணல் அம்​பேத்​கர் விருது விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் மற்​றும் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர் சிந்​தனைச் செல்​வனுக்​கும் பேரறிஞர் அண்ணா விருது அமைச்​சர் துரை ​முரு​க​னுக்​கும் வழங்​கப்​படு​கிறது.

பெருந்​தலை​வர் காம​ராஜர் விருது தேசிய ஒரு​மைப்​பாட்​டுப் பேர​வை​யின் தலை​வர் எஸ்​.எம்​. இத​யத்​துல்​லா​வுக்​கும், மகாகவி பார​தி​யார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்​தாவுக்​கும், பாவேந்​தர் பார​தி​தாசன் விருது கவிஞர் யுக​பார​திக்​கும், தமிழ்த் தென்​றல் திரு.​வி.க. விருது முன்​னாள் தலை​மைச்​செயலர் வெ.இறையன்​புவுக்​கும் முத்​தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ​நாதம் விருது சு.செல்​லப்​பாவுக்​கும், முத்​தமிழறிஞர் கலைஞர் விருது விடு​தலை விரும்​பிக்​கும் வழங்​கப்​படு​கிறது. விரு​தாளர்​களுக்கு ரூ.5 லட்​சம் விருதுத்​தொகை, ஒரு பவுன் தங்​கப்​ப​தக்​கம், தகு​தி​யுரை வழங்​கப்​படும்.

தமிழ் விருதுகள்: மேலும், 2025-ம் ஆண்​டுக்​கான இலக்​கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்​ பாட்​டில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, “உல​கின் பல்​வேறு நாடு​களில் செம்​மாந்த இலக்​கிய உரைகளை நிகழ்த்தி வரும், இலக்​கியச் சுடர் த.ராமலிங்​கத்​துக்​கும், ஆய்​வுத் தமிழ் வகைப்​பாட்​டில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சி.மகேந்​திரனுக்​கும் படைப்​புத் தமிழ் வகைப்​பாட்​டில் விருது நகரைச் சேர்ந்த நரேந்​திர கு​மாருக்​கும் விருது வழங்​கப்​படு​கிறது.

இவ்​விரு​தாளர்​களுக்கு ரூ.5 லட்​சம் விருதுத்​தொகை, ஒரு பவுன் தங்​கப்​ ப​தக்​கம், தகு​தி​யுரை ஆகியவை வழங்​கப்​படும். இவ்விருதுகள், வரும் ஜன.16-ம் தேதி திரு​வள்​ளுவர் தினத்​தில் முதல்​வர் முக..ஸ்​டா​லி​னால் வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT