டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நேற்று சந்தித்துப் பேசினார்.

 
தமிழகம்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு

சட்டம் - ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நிலவும் பரபரப்​பான அரசி​யல் சூழலில், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசினார். இந்த நிகழ்​வின்​போது மாநில சட்​டம் ஒழுங்கு தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக தகவல்​ வெளியாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் கொலை, கொள்ளை போன்ற குற்​றங்​கள் அதி​கரித்​து​விட்​ட​தாக திமுக, அதிமுக உள்​ளிட்ட பல்​வேறு எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன. குறிப்​பாக தீபாவளி பண்​டிகையை ஒட்​டிய 2 நாட்​களில் 11 கொலைகள் நடை​பெற்​றன. இதையடுத்து மாநிலத்​தின் சட்​டம்-ஒழுங்கு நில​வரம் குறித்து முதல்​வர் விஜய், தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார் மற்​றும் காவல்​துறை உயரதி​காரி​களு​டன் சென்​னை​யில் கடந்த 3 நாட்​களாக தொடர் ஆலோ​சனை நடத்தப்பட்டு பல்​வேறு நட​வடிக்​கைகளை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதையொட்டி மாநிலம் முழு​வதும் நூற்​றுக்​கணக்​கான ரவுடிகள் கைது செய்​யப்​பட்​டதுடன், குற்​றங்​கள் நடை​பெறு​வதை தடுப்​ப​தற்​கான முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளும் தற்​போது முழு​வீச்​சில் தீவிரப்​படுத்​தப்​பட்​டது.

இதற்​கிடையே தமிழகத்​தின் சட்​டம்- ஒழுங்கு நில​வரம் குறித்து மத்​திய உள்துறை அமைச்​சகம், மாநில ஆளுநரிடம் அறிக்கை கேட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யிருந்​தன. அதில், சமீபகாலமாக தமிழகத்​தில் நிகழ்ந்​துள்ள குற்​றச்​சம்​பவங்​கள், மாநில அரசு எடுத்​துள்ள நட​வடிக்​கைகள் குறித்து முறை​யாக மதிப்​பீடு செய்து அறிக்கை வழங்​குமாறு அறி​வுறுத்​தப்​பட்​டிருந்​த​தாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தார். இந்த சந்​திப்பு சுமார் 1.30 மணி நேரம் நடை​பெற்​றது. இதில் தமிழகத்​தின் சட்​டம், ஒழுங்கு நில​வரம் குறித்த அறிக்​கையை ஆளுநர் சமர்ப்​பித்​த​தாகவும், அது​தொடர்​பாக விரிவாக விவாதிக்​கப்​பட்​ட​தாகவும் கூறப்​படு​கிறது. மேலும், தவெக புதிதாக ஆட்​சிக்கு வந்​தவர்​கள் என்​ப​தால், நிர்​வாக செயல்​பாடுகளை உன்​னிப்​பாக கண்​காணிக்​குமாறு ஆளுநருக்கு, அவர் அறி​வுறுத்​தி​ய​தாகவும் தெரி​கிறது.

அதேநேரம் மாநிலத்​தின் முழுநேர ஆளுநராக பதவி​யேற்றதை அடுத்து குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு, துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளிட்​டோரை ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சமீபத்​தில் மரியாதை நிமித்​த​மாக சந்​தித்​தார்.

அந்​தவகை​யில் தற்​போது உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவையும், அவர் சந்​தித்​த​தாக ஆளுநர் மாளிகை வட்​டாரங்​கள் தகவல் தெரி​விக்​கின்​றன. தமிழகத்​தில் தற்​போதைய பரபரப்​பான அரசி​யல் சூழலில், மத்​திய அமைச்​சர் அமித் ஷாவுடனான ஆளுநர் அர்​லேகரின் சந்​திப்​பானது முக்​கியத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT