தமிழகம்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நிதி அமைச்சர் ஆஜர்: செப்.9-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: சகோ​தரரை தாக்​கியது தொடர்பான வழக்கில் தமிழக நிதியமைச்​சர் மரியவில்​சன் புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். தொடர்ந்து இவ்​வழக்கு வரும் 9-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக நிதி​யமைச்​சர் மரிய​வில்​சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்​சேரி​யில் வசித்து வரும் அவரது சகோ​தரர் மரியகுளோத் மற்​றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை வீட்​டின் கதவை உடைத்துச் சென்று தாக்​கிய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுகுறித்து லாஸ்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​திருந்​தனர்.

புதுச்​சேரி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் (ஜேஎம் 1) விசா​ரணை​யில் உள்ள இந்த வழக்​கில், குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் பெற ஆஜராக உத்​தர​விட்டபோதும், மரிய​வில்​சன் தொடர்ந்து ஆஜரா​காமல் இருந்து வந்​தார். இந்த வழக்கை புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் ஆஜராவ​தில் விலக்கு அளிக்க​வும் ரத்து செய்ய கோரியும் மரிய வில்​சன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

அதற்​கு, “நீ​தி​மன்​றத்​தில் ஆஜராக மாட்​டேன் எனக் கூற மரிய​வில்​சன் இங்​கிலாந்து அரச​ரா” என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியதுடன் புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் ஆஜராக​வும் அறி​வுறுத்​தி​யது.

இதையடுத்து கடந்த ஆக.31-க்​குப் பிறகு அமைச்​சர் மரிய வில்​சன் புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் ஆஜரா​வார் என உறு​தி​யளிக்​கப்​பட்​டது. தொடர்ந்து புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்கோரி அமைச்​சர் மரிய​வில்​சன் தாக்​கல் செய்த மனுவை வாபஸ் பெற அனு​ம​தித்​து, தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

இவ்​வழக்கை விசா​ரித்து வந்த புதுச்​சேரி முதலா​வது குற்​றவியல் நீதித்​துறை நடு​வர் சேரலாதன் கடந்த வாரம் மாஹேவுக்கு மாற்​றப்​பட்​டார். இச்​சூழலில், கடந்த 31-ம் தேதி முதலா​வது குற்​ற​வியல் நடு​வர் மன்​றத்​தில் இவ்​வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அமைச்​சர் ஆஜராக​வில்​லை. அப்​போது உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி விரைந்து விசா​ரிக்​கு​மாறு அமைச்​சரின் சகோ​தரர் தரப்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டது. அதைத்​தொடர்ந்து இவ்​வழக்கை செப்​.4-ம் தேதிக்கு குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் தள்​ளி​வைத்​தார்.

இந்​நிலை​யில் புதுச்​சேரி முதலா​வது குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நேற்று மரிய​வில்​சன் ஆஜரா​னார். தொடர்ந்​து, வழக்கு தொடர்​பான குற்​றப்​பத்​திரி​கையை பெற்​றுக்​கொண்டார். இதையடுத்து நீதிபதி சந்​திரசேகர் வழக்கு விசா​ரணையை வரும் 9-ம் தேதி தள்​ளி​வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “நீ​தி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தால், இந்த வழக்கு தொடர்​பாக எந்​த​வித கருத்​தை​யும் தெரிவிக்க முடி​யாது” என கூறி​விட்​டுச் சென்​றார்.

உயிருக்கு அச்​சுறுத்​தல்

அமைச்​சர் மரிய​வில்​சன் மீது வழக்கு தொடர்ந்​துள்ள அவரது சகோ​தரர் மரியகுளோத் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “குடும்ப பிரச்​சினை காரண​மாகத்தான் எனக்​கும், மரிய வில்​சனுக்​கும் தகராறு ஏற்​பட்​டு, வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு பதிவு சம்​பவம் முடிந்​து, நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணைக்கு வந்த பிறகு எனக்கு தொடர்ச்​சி​யாக மிரட்​டல் வரு​கிறது.

இதனால் உயிருக்கு பயந்து நான் துபா​யில் தங்கி இருந்​தேன். இப்​போது வழக்கு விசா​ரணை என்​ப​தால் புதுச்​சேரி வந்​துள்​ளோம். தொடர்ச்​சி​யாக எனக்​கும், என் மனை​விக்​கும் மிரட்​டல் வரு​கிறது. எங்​கள் உயிருக்கு அச்​சுறுத்​தல் உள்​ளது. இப்​போதும் வி​சா​ரணை முடிந்து வெளியூர் செல்​கிறேன். பாது​காப்பு கரு​தி நான்​ எங்​கு செல்​கிறேன்​ என தெரிவிக்​க முடி​யாது” என்​று கூறினார்​

SCROLL FOR NEXT