தமிழகம்

காவல் உட்பட அனைத்து துறையினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் சீமா அகர்வால்: டிஜிபி மகேஷ்குமார் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறையினராலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால் என டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பாராட்டு தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி​கள் துறை இயக்​குந​ராக உள்ள ஐபிஎஸ் அதி​காரி சீமா அகர்​வாலின் பணிக்​காலம் வரும் 30-ம் தேதி முடிவடைகிறது. ராஜஸ்​தான் மாநிலத்தைச் சேர்ந்த சீமா அகர்​வால், காவல்​துறை​யில் பல்​வேறு பொறுப்​பு​களில் 36 ஆண்​டு​கள் சிறப்​பாக பணி​யாற்​றி​யுள்​ளார். இவரது பணிக்​காலத்தை சிறப்​பிக்​கும் வகை​யில் தமிழக காவல்​துறை சார்​பில் சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், ஐபிஎஸ் அதி​காரி​கள், ஓய்​வு​பெற்ற ஐபிஎஸ் அதி​காரி ஏ.கே.​விஸ்​வ​நாதன், காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் கலந்​து​கொண்​டனர். சீமா அகர்​வாலுக்கு அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசி​ய​தாவது: சீமா அகர்​வால் மூத்த அதி​காரி மட்​டுமல்ல, அவரின் மனி​தாபி​மானமிக்க அணுகு​முறை அவரை உயர்ந்த இடத்​தில் நிறுத்​தி​யுள்​ளது. எந்த பிரி​வில் பணி​யாற்​றி​னாலும் அதில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றப்​பிரி​வில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்​தார். ரயில்வே ஐஜி​யாக இருந்​த​போது விபத்​துகளை தடுக்க அதிக நடவடிக்​கைகள் மேற்​கொண்​டார். காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறை​களை சேர்ந்​தவர்​களாலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால். இவ்​வாறு டிஜிபி பேசி​னார்.

சீமா அகர்​வால் பேசும்​போது, “சட்​டம் ஒழுங்கு மற்​றும் புல​னாய்வு பிரிவு அல்​லாமல் சிறப்பு பிரிவு​களில் பணி​யாற்​றும்​போது எனக்கு தெளி​வான பார்வை கிடைத்​தது. தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​களுக்கு ஒன்றை கூற விரும்​பு​கிறேன். பாதிக்​கப்​படும் விளிம்​புநிலை மக்​களுக்கு உறு​துணை​யாக இருக்க முடி​யு​மா, பொது​மக்​களிடம் கனி​வாக இருக்க முடி​யுமா என்​பது குறித்து நீங்​களே உங்​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி மக்​களுக்கு சிறப்​பான சேவை​யாற்ற வேண்​டும்’’ என்​றார்.

SCROLL FOR NEXT