தமிழகம்

தமிழக நீதிமன்றங்களுக்கு ஏப்​.23-ம் தேதி விடுமுறை: புதுச்சேரியில் ஏப்.9 விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெறவுள்​ள​தால், அன்​றைய தினம் சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை கிளை மற்​றும் தமிழகம் முழு​வதும் உள்ள கீழமை நீதி​மன்​றங்​களுக்கு விடு​முறை அளிக்​கப்​படு​கிறது.

அதே​போல், புதுச்​சேரி​யில் ஏப்​.9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால் அன்​றைய தினம் புதுச்​சேரி​யில் உள்ள கீழமை நீதி​மன்​றங்​களுக்கு விடு​முறை அளிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

          
SCROLL FOR NEXT