தமிழகம்

அண்டை மாநிலங்களில் இருப்பது போல ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க அரசு பரிசீலனை

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்​தி​ரா, கேரளா மற்​றும் கர்​நாட​காவை போல் தமிழகத்​தில் உள்ள ஓட்​டல்​களில் ரெஸ்டோ பார்​களுக்கு அனு​மதி வழங்க அரசு பரிசீலித்து வரு​வ​தாக தகவல்கள் வெளி​யாகி உள்​ளன.

தமிழகத்​தில் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் கடைகள் மூலம் தின​மும் கோடிக்​கணக்​கில் வரு​வாய் ஈட்​டப்​படு​கிறது. இந்த நிலை​யில் புதி​தாக பதவி​யேற்​றுள்ள தவெக அரசு தமிழகம் முழு​வதும் பள்​ளி​கள், பேருந்து நிலை​யங்​கள், வழி​பாட்டு தலங்​கள் அரு​கில் உள்ள 717 டாஸ்​மாக் கடைகளை மூட உத்​தர​விட்​டது.

அடுத்​த​தாக டாஸ்​மாக் கடைகளில் பல்​வேறு கட்​டுப்​பாடு​களும் விதிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த நிலை​யில் டாஸ்​மாக் நிறு​வனம் தமிழகத்​தின் முக்​கிய நகரங்​களில் உள்ள ஓட்​டல்​களில் அண்டை மாநிலங்​களான கர்​நாட​கா, கேரளா மற்​றும் ஆந்​திரா போல் ரெஸ்டோ பார்​கள் செயல்பட அனு​மதி வழங்க அரசு பரிசீலித்து வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இந்த அறி​விப்பு வரவிருக்​கும் சட்​டப்பேரவை பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் வெளி​யாகும் என டாஸ்​மாக் வட்​டாரங்​கள் தெரிவித்​துள்​ளன. தற்​போது ரெஸ்டோ பார்​களுக்கு தனி​யான உரிமம் (லைசன்​ஸ்) வழங்​கப்​பட​வில்​லை. இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எஃப்​.எல்.1 உரிமம் டாஸ்​மாக் கடைகளுக்​கும், எஃப்​.எல்-2 உரிமம் கிளப்​பிற்​கும், எஃப்​.எல்- 3 நட்​சத்​திர தனி​யார் விடு​தி​களுக்​கும் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதில் பல இடங்​களில் எஃப்​.எல்-2 உரிமம் பெற்ற சில தனி​யார் கிளப்​பு​கள், உறுப்​பினர்​களுக்கு மட்​டுமே மது​பானம் வழங்க அனு​மதி இருந்​தா​லும், பொது​மக்​களுக்​கும் உணவுடன் சேர்த்து மது​பானம் வழங்கி வரு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் வந்​துள்​ளன. இதனால் அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படக்​கூடும்.

இதை ஒழுங்​குபடுத்​தபொழுது​போக்கு சங்க உரிமத்​தின் கீழ் இவ்​வகை சேவை​களை அனு​ம​திப்​ப​தற்​குப் பதிலாக, ரெஸ்டோ பார்​களுக்​கென தனி உரிமம் வழங்க அரசு திட்​ட​மிட்டு வரு​கிறது. அதன்​படி, ரெஸ்டோ பார்​கள் அமைக்க எஃப்​.எல்​.பி உரிமம் பெற வேண்​டும். அதே​போல், எஃப்​.எல்​.ஏ.ஏ மற்​றும் எஃப்​.எல்.ஏ என உரிமங்​கள் உள்​ளன. ஏற்​க​னவே, தமிழ்​நாடு சுற்றுலாத்​துறை சார்​பாக ரெஸ்டோ பார்​கள் சுற்​றுலாப்​பயணி​களின் வசதிக்​காக இயங்கி வரு​கிறது.

சமீபத்​தில் சென்னை நகரில் எஃப்​.எல்-2 உரிமம் பெற்ற கிளப்​பு​களுக்​கான ஆண்டு சிறப்பு கட்​ட​ணம் ரூ.15 லட்​சத்​திலிருந்து ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. இதே​போல், புதிய ரெஸ்டோ பார் உரிமத்​திற்​கும் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட வாய்ப்​பு​கள் உள்​ளன. மேலும், டாஸ்​மாக் கடை களுடன் இணைந்​துள்ள பார்​களின் எண்​ணிக்​கையை படிப்​படி​யாகக் குறைத்​து, அதற்​குப் பதிலாக உரிமம் பெற்ற ரெஸ்டோ பார்​களை ஊக்​கு விக்​கும் வாய்ப்​பை​யும் அரசு பரிசீலித்​து வரு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறினார்.

SCROLL FOR NEXT