தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார்

 
தமிழகம்

சட்டம் - ஒழுங்கு குறித்து தலைமைச் செயலர் மீண்டும் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு விவகாரம் குறித்து கடந்த ஒரு வாரத்​தில் 4 முறை ஆலோ​சனை கூட்​டங்​கள் நடத்தப்பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் கொலை, கொள்ளை போன்ற குற்​றங்​கள் அதிகரித்து​விட்​ட​தாக திமுக, அதிமுக உள்​ளிட்ட பல்​வேறு எதிர்க்கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வருகின்​றன. குறிப்​பாக தீபாவளி பண்​டிகையை ஒட்​டிய 2 நாட்களில் மாநிலம் முழு​வதும் 13 கொலைகள் நடை​பெற்​றன. இதையடுத்து மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து முதல்​வர் விஜய், உயரதி​காரி​களு​டன் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்​கள் ஆலோ​சனை நடத்தி, பல்​வேறு நட​வடிக்​கைகளை மேற்​கொள்ள உத்​தர​விட்​டார்.

அவருடைய அறி​வுறுத்​தலின்​படி தமிழகம் முழு​வதும் குற்​றங்​கள் நடை​பெறு​வதை தடுக்க முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளும் தற்​போது தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்​தச் சூழலில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் சந்​தித்​தார்.

இந்த சந்​திப்பு சுமார் 1.30 மணி நேரம் நடை​பெற்​றது. அப்​போது தமிழகத்​தின் சட்​டம், ஒழுங்கு நில​வரம் குறித்த அறிக்​கையை ஆளுநர் அர்​லேகர் சமர்ப்​பித்​த​தாகவும், அதில் சமீப காலமாக மாநிலத்​தில் நிகழ்ந்த குற்​றங்​கள், அவற்​றின் மீது மாநில அரசு எடுத்​துள்ள நட​வடிக்​கைகள் குறித்​து விரிவாக இடம்பெற்றுள்ளதாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் மாநிலத்​தின் சட்​டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்​றும் நடைபெற்​றது.

தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார் தலை​மையில் நடந்த இந்​தக் கூட்​டத்​தில் உள்​துறைச் செயலர் ஏ.கார்த்​திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால், சென்னை மாநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் மற்​றும் காவல் துறை உயரதி​காரி​கள் கலந்துகொண்டனர். இந்​தக் கூட்​டம் சுமார் ஒன்​றரை மணி நேரம் நடை​பெற்​றது.

இதில் ஏற்​கெனவே நடை​பெற்ற ஆலோ​சனைகளில் விவாதிக்கப்பட்ட சட்​டம் - ஒழுங்கு நில​வரம், கண்​காணிப்பை தீவிரப்​படுத்த காவல் துறை மேற்​கொள்ள வேண்​டிய நடவடிக்கைகள், சர்ச்​சையாகி இன்​னும் முடிக்​கப்​படாத வழக்குகளின் நிலவரம் குறித்து பேசப்​பட்​ட​தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்து கடந்த ஒரு வாரத்​தில் மட்டும் 4 முறை ஆலோ​சனை கூட்​டங்​கள் நடத்தப்பட்​டுள்​ளன என்பது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT