வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தயார் நிலையில் கடலோரக் காவல் படை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தயார் நிலையில் கடலோரக் காவல் படை
Updated on: 
1 min read

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள காற்​றழுத்த தாழ்வு பகுதி புய​லாக வலுப்​பெறக் கூடும் என கணிக்​கப்​பட்​டுள்​ள​தால், கிழக்கு கடற்​கரை பகுதி​களில் இந்​திய கடலோரக் காவல் படை கண்​காணிப்பு மற்​றும் மீட்​புப் பணிகளுக்​காக தயார் நிலை​யில் உள்​ளது.

தென் கிழக்கு வங்​கக் கடலில் நவ. 13-ம் தேதி உரு​வான காற்றழுத்த தாழ்​வுப் பகுதி, புய​லாக மாற வாய்ப்​புள்​ள​தால் கடல் சார் பாது​காப்பை உறுதிப்​படுத்​தவும், உயிர் மற்​றும் உடைமை இழப்​பு​களைத் தவிர்க்​கவும் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. இந்​திய கடலோரக் காவல் படை​யின் ரேடார் நிலை​யங்​கள் மூலம் இந்த வானிலை மாற்​றம் 24 மணி நேர​மும் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது.

கடலில் மீன்​பி​டிக்க சென்​றுள்ள மீனவர்​கள், வணிக கப்​பல்​கள் மற்​றும் மாலுமிகளுக்​குத் தகுந்த நேரத்​தில் பாது​காப்பு ஆலோசனைகளை வழங்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்​ளன. சென்னை உள்​ளிட்ட பகுதி​களில் உள்ள தொலைநிலை செயல்​பாட்டு நிலை​யங்​கள் மூலமாக, உயர் அலை​வரிசை கரு​வி​கள் வழியே பிராந்​திய மொழிகளில் தொடர்ந்து புயல் எச்​சரிக்​கைகள் ஒலிபரப்​பப்​பட்டு வரு​கின்​றன. மேலும், துறைமுகங்​களில் நங்​கூரமிட்​டுள்ள கப்​பல்​களுக்கு எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டிருப்​ப​துடன், துறைமுக அதிகாரிகளுக்கும் உரிய தகவல்​கள் பரிமாறப்​பட்​டுள்​ளன.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் ஆந்​திர பிரதேச கடற்​கரைப் பகுதிகளில் அவசர கால சூழல்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில், இந்​திய கடலோரக் காவல் படை​யின் பேரிடர் மீட்​புக் குழுக்​கள் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. தேடல் மற்​றும் மீட்புப்பணிகள் மற்​றும் பேரிடர் நிவாரண பணிகளை உடனடியாக மேற்​கொள்ள அனைத்து கப்​பல்​களும், விமானங்களும் தயாராக உள்​ள​தாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தயார் நிலையில் கடலோரக் காவல் படை
சபரிமலையில் மண்டல கால வழிபாட்டுக்கு நாளை நடை திறப்பு

X