தமிழகம்

இடைக்கால பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வரவேற்​றும், விமர்​சித்​தும் கருத்​துக்​களை தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: இயற்கை வேளாண்​மைக்கு முக்​கி​யத்​து​வம் தொடங்​கி, வேளாண்​மை​யில் அறி​வியலைப் பயன்​படுத்​து​வது வரையி​லான நம்​முடைய முன்​னெடுப்​பு​களால், உழவர் வாழ்​வில் உதய சூரிய​னின் ஒளி பரவு​கிறது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: தமி​ழின தொன்​மையை விளக்​கும் அருங்​காட்​சி​யகங்​கள் முதல் நவீன உலகுக்​கான செயற்கை நுண்​ணறிவு அறி​வு​சார் பொருளா​தார வளர்ச்சி வரை அனைத்​தி​லும் கவனம் செலுத்தி உள்ள திரா​விட மாடல் பட்​ஜெட்.

          

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்: வரும் மார்ச் 31, 2027-க்​குள் தமி​ழ​கத்​தின் மொத்​தக் கடன் ரூ.10,62,248 கோடி​யாக உயரும் என பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வளர்ச்​சிப் பணி​கள் முடங்​கிக் கிடக்​கும் நிலை​யில், இந்த நிதி எங்கே சென்​றது? தமி​ழ​கத்தை ஒரு தீராத கடன் படு​குழி​யில் தள்​ளியதே இந்த அரசின் வரலாற்​றுச் சாதனை.

மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ: தமி​ழ​கத்​தின் வளர்ச்​சி​யில் எவரை​யும் பின்​தங்கி விட அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்​ளதை செயல்​படுத்​தும் வகை​யில் இடைக்​கால நிதி நிலை அறிக்கை வரவேற்​கத்​தக்​க​தாக இருப்​பது பாராட்​டத்​தக்​கது.

திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி: மாநில மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் நிதிப் பற்​றாக்​குறையை 3 சதவீத​மாக கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது பாராட்​டுக்​குரியது. மத்​திய அரசின் கொள்​கை​களால் வேளாண் துறை பல்​வேறு சவால்​களைச் சந்​தித்து வரும் வேளை​யில், தமிழக விவ​சா​யிகளுக்​குப் பாது​காப்பு அரணாகத் திகழ்​கிறது இந்த பட்​ஜெட்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்டியன்: மகளிர் உரிமைத் தொகை உள்​ளிட்ட பெண்​கள், மாண​வர்​கள் மற்​றும் விவ​சா​யிகளுக்​கான நேரடி நிதி உதவித் திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டிருப்​பது பாராட்​டுக்​குரியது. கடும் நிதிச் சுமை​களுக்கு இடையே சாமானிய மக்​களின் நலனைப் பாது​காக்​கும் வகை​யில் இந்த அறிக்​கையை மாநில அரசு வழங்​கி​யுள்​ளது.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது தமிழக அரசின் இடைக்​கால பட்​ஜெட் அல்ல. வெற்​றுப் பெருமை பத்​திரம். ஐந்​தாண்​டு​களாக ஏமாற்​றத்​துக்​குப் பழகிய மக்​களுக்கு இந்த ஏமாற்​ற​மும் புதி​தில்​லை. மாற்​ற​மும் தொலை​விலில்​லை.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழ்​நாட்டை கடந்த ஐந்​தாண்​டு​களாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்​நாட்டை எந்த அளவுக்கு கடன்​கார மாநில​மாக மாற்றி வைத்​திருக்​கிறது என்​ப​தற்கு சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடைக்​கால நிதி​நிலை அறிக்கை தான் சான்​று. தமி​ழ​கத்​தி​லுள்ள ஒவ்​வொரு​வர் பெயரிலும் ரூ.1.27 லட்​ச​மும், 4 பேர் கொண்ட ஒரு குடும்​பத்​தின் பெயரில் ரூ.5.08 லட்​ச​மும் கடன் சுமையை மு.க.ஸ்​டா​லின் அரசு சுமத்​தி​யிருக்​கிறது.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களின் நீண்​ட​காலப் போராட்​டக் கோரிக்​கை​கள் குறித்து எந்​தவொரு ஆக்​கப்​பூர்​வ​மான அறி​விப்​பும் இல்​லாதது மிகுந்த வருத்​தமளிக்​கிறது. போதைப்​பொருள் கலாச்​சா​ரத்தை ஒழிக்​கவோ, டாஸ்​மாக் கடைகளை மூடி மது அரக்​க​னிட​மிருந்து மக்​களைக் காக்​கவோ இந்த பட்​ஜெட்​டில் துணிச்​சலான திட்​டங்​கள் இல்​லை.

இதே​போல், பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், தவெக கொள்கை பரப்பு பொதுச்​செய​லா​ளர் அருண்​ராஜ், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள், அமைப்​பு​கள், தன்​னார்​வலர்​கள் தமிழக அரசின் பட்​ஜெட்டை பாராட்​டி​யும், விமர்​சித்​தும் உள்​ளனர்​.

SCROLL FOR NEXT