தமிழகம்

கடந்த 5 ஆண்டுகளில் நெல் ஊக்கத்தொகை ரூ.2,118 கோடி: பட்ஜெட்டில் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 5 ஆண்​டு​களில் 186 லட்​சம் மெட்​ரிக் டன் நெல் கொள்​முதல் செய்​து, ரூ.2,118 கோடி ஊக்​கத்​தொகை​யாக வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, தமிழக சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட வேளாண் பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்னை உற்​பத்தி மற்​றும் உற்​பத்​தித் திறனை அதி​கரிக்​கும் வகை​யில், மாநில தென்னை நாற்று மையம் நிறு​வுதல், செயல் விளக்​கத் திடல் அமைத்​தல், இயற்கை உரக்​கூ​டாரம் அமைத்​தல், தென்​னந்​தோப்​பு​களில் மறுநடவு மற்​றும் புத்​தாக்​கம் ஆகிய இனங்​கள் கடந்த 5 ஆண்​டு​களில் 17,860 ஹெக்​டரில் ரூ.54 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்டு 26,800 விவ​சா​யிகள் பயனடைந்​துள்​ளனர். ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் விவ​சா​யிகளுக்கு மின்​சார அல்​லது சூரிய சக்தி பம்​புசெட்​டுடன் கூடிய 2,115 ஆழ்​துளை அல்​லது குழாய்க் கிணறுகள், ரூ.122 கோடி​யில் 100 சதவீத மானி​யத்​தில் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

          

விவ​சா​யிகளை மேலும் ஊக்​கப்​படுத்​தும் வித​மாக நெல், கரும்​புக்கு சிறப்பு ஊக்​கத்​தொகையை தமிழக அரசு வழங்​கு​கிறது. 2025-26 குறுவை கொள்​முதல் பரு​வத்​தில் சன்ன ரக நெல்​லுக்கு குவிண்​டாலுக்கு ரூ.156-ம், சாதாரண ரகங்​களுக்கு ரூ.131-ம் ஊக்​கத்​தொகை​யாக வழங்​கி, அவற்​றின் கொள்​முதல் விலை முறையே ரூ.2,545 மற்​றும் ரூ.2,500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​களில் இது​வரை 186 லட்​சம் மெட்​ரிக் டன் கொள்​முதல் செய்​யப்​பட்டு ரூ.2,118 கோடி ஊக்​கத்​தொகை​யாக வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி

தமிழக அரசின் இடைக்​கால பட்​ஜெட்​டில் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: தமி​ழ​கத்​தின் பல்​வேறு பகு​தி​களில் தேவை​யான விளை​யாட்டு உள்​கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி கலைஞர் விளை​யாட்​டுத் தொகுப்​பு​கள் வழங்​கும் திட்​டத்​தின்​கீழ் ரூ.86 கோடி​யில் 12,525 கிராம ஊராட்​சிகளுக்கு 16,798 விளை​யாட்​டுத் தொகுப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும், தேசிய மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் பதக்​கம் வென்று தமி​ழ​கத்​துக்கு பெருமை சேர்த்த 5,403 விளை​யாட்டு வீரர்​களுக்கு ஊக்​கத்​தொகை​யாக ரூ.176 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக 2025-ம் ஆண்டு குடிமைப்​பணித் தேர்​வில் வென்ற தமிழக மாண​வர்​கள் 59 பேரில் 52 பேர் ‘நான் முதல்​வன்’ திட்​டப் பயனாளி​களாவர். ‘உங்​கள் தொகு​தி​யில் முதலமைச்​சர்’ எனும் திட்​டத்​தின்​கீழ் ரூ.15,467 கோடி​யில் 1,410 பணி​கள் எடுக்​கப்​பட்​டு, 1,394 பணி​களுக்கு ஆணை​கள் வெளி​யிடப்​பட்​டு, 808 பணி​கள் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளன. இதர 586 பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு​மு​தி​யோர் ஓய்​வூ​தி​யம் உட்பட அனைத்து சமூகப் பாது​காப்​புத் திட்​டங்​களுக்​கும் வரு​வாய்த் துறை​யின் கீழ் இடைக்​கால பட்​ஜெட்​டில் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT