தமிழகம்

சமூக நீதி விடுதியில் கெட்டுப்போன உணவு: தமிழக பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: சமூக நீதி விடு​தி​யில் மாணவி​களுக்கு கெட்​டுப்​போன உணவு வழங்​கப்​பட்​டதற்கு தமிழக பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி சமூக நீதிக் கல்​லூரி மாண​வியர் விடு​தி​யில் தரமற்ற, புழுக்​கள் நிறைந்த உணவு வழங்​கப்​பட்​ட​தாக அவ்​விடுதி மாணவி​கள் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருப்​பது, பெண்​கள் மற்​றும் மாணவி​களின் நலனை அரசு எவ்​வாறெல்​லாம் புறக்​கணித்து வரு​கிறது என்​பதை உணர்த்​துகிறது.

          

இந்த உணவால் உடல்​நலம் பாதிப்​படைவ​தாகக் கூறி, தகுந்த நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி​யும். இது தொடர்​பாக உணவு பாது​காப்​புத் துறை​யினர் உள்​ளிட்ட பல்​வேறு அரசு அதி​காரி​கள் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தி​யும் தொடர்​புடைய விடுதி நிர்​வாகத்​தின் மீது நடவடிக்கை இல்லை என்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது.

விடுதி நிர்​வாகத்​தினர், கேள்வி எழுப்​பும் மாணவி​கள் குறித்து தவறாக பேசுவதும், அவர்​களின் பெற்​றோரிடம் மாணவி​கள் குறித்து அவதூறு பேசுவதும் தொடர்​கிறது என்று மாணவி​கள் தெரிவிக்​கின்​றனர்.

முதல்​வர் தனிப்​பிரிவுக்கு இது குறித்து புகார் அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காதது பெண்​கள் மீதான திமுக​வின் அலட்​சி​யப் போக்கை படம் பிடித்​துக் காட்​டு​கிறது.

பெண்​களுக்கு ரூ.1,000 கொடுத்து விட்​ட​தாக மார்​தட்​டிக் கொள்​ளும் திமுக அரசு, பெண்​களின் பாது​காப்பு மற்​றும் ஆரோக்​கி​யத்​தில் கவனம் செலுத்​தாததோடு அவர்​களின் நற்​பெயருக்கு களங்​கம் விளைவிக்க முயற்​சிக்​கும் நபர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காதது ஏன்? இது தான் திரா​விட மாடலா? இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT