சென்னை: தமிழக பாஜக ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.
புராதனக் கோயில் என்பதால், ஒவ்வொரு சீரமைப்பு பணியும் தொல்லியல் துறையின் பரிந்துரைப்படியே நடைபெற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், எந்தவித முறையான பரிந்துரையும் இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பணிக்காக வாரி வழங்கிய உபயதாரர்களுக்கு அழைப்பிதழ்கூட வழங்கப்படவில்லை. பக்தர்களைவிட ‘பாஸ்’ வைத்திருப்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்த அறநிலையத் துறைக்கு இந்த கும்பாபிஷேக மேலாண்மையில் கிடைப்பது ‘பெயில்’ மார்க் மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.