தமிழகம்

அரசு வழக்கறிஞர் தேர்வு: சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர் தேர்​வில் சான்​றிதழ் குறை​பாடு​களை சரிசெய்ய ஜூன் 8-ம் தேதி வரை அவ​காசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.  வெங்கட பிரியா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் 2-ம் தேதி வெளி​யிடப்​பட்ட அறிவிக்​கை​யின்​படி நடத்​தப்​பட்ட அரசு உதவி குற்​ற​வியல் வழக்​கறிஞர் தேர்​வில் (கிரேடு-2) தேர்​வர்​களின் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன. அப்​போது, சில தேர்​வர்​கள் ஒருசில சான்​றிதழ்​களை முழு​மை​யாக பதிவேற்​றம் செய்​யாமல் இருப்​பதும், சிலர் உரிய சான்​றிதழ்​களை பதிவேற்​றாமல் இருப்​பதும், ஒருசிலர் முதன்​மைத் தேர்​வுக்​கான கட்​ட​ணத்தை செலுத்​தாமல் இருப்​பதும் கண்​டறியப்​பட்​டது.

அத்​தகைய தேர்​வர்​களின் பதிவெண்​கள் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக அவர்​களுக்கு மின்​னஞ்​சல் மற்​றும் குறுஞ்​செய்தி வாயி​லாக தகவல் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அவர்​கள் சான்​றிதழ் குறை​பாடு​களை சரிசெய்ய ஜூன் 8-ம் தேதி வரை காலஅவ​காசம் அளிக்​கப்​படு​கிறது.

குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் தேவை​யான சான்​றிதழ்​களை சரி​யாக பதிவேற்​றம் செய்​யு​மாறும், மேலும், முதன்மை தேர்​வுக்​கான கட்​ட​ணத்தை செலுத்​தாதவர்​கள் அதை செலுத்​து​மாறும் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இல்​லா​விட்​டால் அவர்​களின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT